6

1.BABASAHIB AMBEDKAR 2.PANDIDAR AYOTHIDAS
3.RETTAIMALAI SEENIVASAN 4.APPADURAIYAR
5.M.C.RAJA 6.MAHATMA AYANKALI
7.JOHN RATNAM 8.KAKKAN
9.LACHMI NARASU 10.DR.PERUMAL
11.SAGJANANDA 12.J.SHIVA SHANMUGAM PILLAI
13.A.P.VALLINAYAGAM 14.CHOKHAMELA
15.THIRUVALLUVAR 16.MAHATMA POOLE
17.SAMUVEL PARAIYANAAR 18.NANDANAR
19.N.SIVRAJ 20.ANNAAI MEENAMBAL SIVRAJ
21.WILLIAM BOOTH 22.SHAHU MAHARAJ
23.SAVITHRIBAI POOLE 24.MOTHER THRESA
25.PERIYAR DASAN 26.T.M.MANI
27.KANSIRAM 28.BUDDHA
29.THANTHI PERIYAR 30.VALLAL MADURAI PILLAI
31.MAAVIRAN ARIYA SANGARAN 32.SATYAVANIMUTHU AMMAIYAR
33. 34.
35. 36.


1.பாபாசாகிப் அம்பேட்கர்
(14/04/1891-06/12/1956)


                 விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.
பிறப்பு: ஏப்ரல் 14, 1891
இடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா
பணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்
இறப்பு: டிசம்பர் 6, 1956
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.
1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.
உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்
பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.
சமூகப்பணிகள் 1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”
இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்
வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார். விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.
பெளத்த சமயம் மீது பற்று தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.
அம்பேத்கரின் பொன்மொழிகள்
 “ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”
 “ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”
 “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”
.  “சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”
 “வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”
இறப்பு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

மகாராட்டிர அரசின் கல்வித்துறை, முனைவர்.அம்பேத்காரின் உரையாடல்களையும், உரைகளையும் தொகுதிகளாக வெளியிட்டுள்ளன. அவை வருமாறு;-
தொகுதிகள் விவரம்
தொகுதி - 1. கூட்டாட்சியா, சுதந்திரமா?
தொகுதி - 2. சமூகப் பாதுகாப்பு
தொகுதி - 3. அதிகாரமும் உறவும்
தொகுதி - 4. வட்ட மேசை மாநாடுகளில்.
தொகுதி - 5. பொதுவுடைமைக்கான முற்படுதேவைகள்
தொகுதி - 6. The evolution of provincial finance in British India
தொகுதி - 7. Who Were the Shudras? ; The untouchables
தொகுதி - 8. பாக்கிசுத்தான் அல்லது இந்திய பிரிவினை
தொகுதி - 9. What Congress and Gandhi have done to the untouchables; Mr. Gandhi and the emancipitation of the untouchables
தொகுதி-10. Dr. Ambedkar as member of the Governor General's Executive Council, 1942–46
தொகுதி-11. The Buddha and His Dhamma
தொகுதி-12. Unpublished writings; Ancient Indian commerce; Notes on laws; Waiting for a Visa ; Miscellaneous notes, etc.
தொகுதி-13. டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பின் முதன்மை சிற்பி.
தொகுதி-14. (2 பகுதிகள்) Dr. Ambedkar and The Hindu Code Bill
தொகுதி-15. Dr. Ambedkar as free India's first Law Minister and member of opposition in Indian Parliament (1947–1956)
தொகுதி-16. டாக்டர் அம்பேத்கரின் பாளி மொழி இலக்கணம்.
தொகுதி-17 (பகுதி 1) Dr. B.R. Ambedkar and his Egalitarian Revolution – Struggle for Human Rights. Events starting from March 1927 to 17 November 1956 in the chronological order
(பகுதி 2) Dr. B. R. Ambedkar and his Egalitarian Revolution – Socio-political and religious activities. Events starting from November 1929 to 8 May 1956 in the chronological order
(பகுதி 3) Dr. B. R. Ambedkar and his Egalitarian Revolution – Speeches. Events starting from 1 January to 20 November 1956 in the chronological order
தொகுதி-18 (3 பகுதிகள்) மராத்தியில் டாக்டர் அம்பேத்கரின் பேச்சுக்களும் எழுத்தும்.
தொகுதி-19 மராத்தியில் டாக்டர் அம்பேத்கரின் பேச்சுக்களும் எழுத்தும்.
தொகுதி-20 மராத்தியில் டாக்டர் அம்பேத்கரின் பேச்சுக்களும் எழுத்தும்.
தொகுதி-21 Dr. B. R. Ambedkar’s Photo Album and correspondence.
TO READ HIS LIFE LINE CLICK



2.பண்டிதர் அயோத்திதாசர்
(20/05/1845-05/05/1914)


                 தமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார். லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது
                 தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார். பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஆரிய, திராவிட போர் தமிழகத்தில் வீரியமாய் நடந்த காலத்தில் அதற்கு அடித்தளமாய் பல ஆண்டுகளுக்கு முன்னால் வேத எதிர்ப்பு, சாதி மறுப்பு என்று வருண சனியை வலு கொண்டு தன் கருத்து ஆயுதத்தால் அடித்து நொறுக்கியவர்.வாழ்க்கைச் சுருக்கம் பண்டிதர் அயோத்திதாசர் 20.05.1845 இல் தமிழகத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் குறித்து ஆய்வாளர் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள். ராயபுரத்தில் பிறந்தார் என்றும், தேனாம்பேட்டை மங்கித்தோட்டத்தில் பிறந்தார் எனவும், மேலும் கோவை அரசம்பாளையம் எனவும் எழுதி வருகின்றார்கள். இவருடைய தந்தை பெயர் கந்தசாமி, தாயார் பெயர் தெரியவில்லை. இவரின் பாட்டனார் பெயர் பட்லர் கந்தப்பன் ஆகும். ஆங்கிலேயரிடம் பட்லராகப் பணிபுரிந்த இவர், பாதுகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடியில் உள்ள திருக்குறளை எல்லிசு துரைக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களே தேச வரலாறையும் இலக்கிய வரலாறையும் பாதுகாத்தார்கள் என்பதற்கு இது மாபெரும் எடுத்துக்காட்டாகும்.
                 அயோத்திதாசருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். பிறகு தன் பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். தோடர் குலப்பெண்ணை அக்காலத்திலேயே சீர்திருத்தத் திருமணம் செய்து புரட்சி செய்தார். இருவருக்கும் தசரதராமன் என்கிற மகன் இருந்தார் எனவும் தெரிகிறது. இவரது மனைவியார் மரணமடைந்தபிறகு பண்டிதர் உறவினர்களின் வற்புறுத்தலினால் சமூகப்போராளி இரட்டைமலை சீனிவாசன் தாத்தா அவர்களின் சகோதரி தனலட்சுமி அம்மையாரை மணம் முடித்துக் கொண்டு இல்லற வாழ்வை நடத்தினார். தசரத ராமனோடு இவருக்கு ஐந்து மகன்களும் இரண்டு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.பண்டிதரின் அறிவுத் தேடல் ஒவ்வொருவரும் இந்து சதுர்வர்ண சதியை புரிந்து கொள்ளும்போது அதன் கொடூரம் வெளிப்படும். அந்த வகையில் அயோத்தி தாசர் தன் சமூகம் சாதிய வன்கொடுமையை அனுபவிப்பதற்கு காரணங்களை ஆராய்ந்து தெளிந்த போது இந்து சமயத்தையே உதறித் தள்ளுகின்றார். பண்டிதர் இளமையிலேயே கற்கும் ஆர்வத்தினை கொண்டு, குருகுலத்தில் சேர்ந்து கல்வி கற்றார். மானுடத்தில் ஒடுக்கப்பட்ட என்று சொல்லப்படுகின்ற பூர்வகுடி தலித் மக்கள் கல்வி கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற மடையன் மனுவின் அதர்மத்தை தான் அனைத்தையும் கற்று பயின்றதின் மூலம் உடைத்தெரிகிறார் அயோத்தி தாசர். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைவினை பூர்வ குடிமக்கள் தருவோம் என்று அயோத்தி தாசர் படித்து கல்வி மாமேதை அம்பேத்கருக்கு முன்னால் எதிர்வினையாற்றினார்.

தமிழ், ஆங்கிலம், பாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இஸ்லாம், கிருத்துவ இந்து சமய தத்துவங்களை ஆழ கற்று உணர்ந்தார். அனைத்து துறைகளிலும் கற்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிவுடைய சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அரசர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்த ஆரியவர்க்கத்தின் ஆணிவேரை வெட்டி எரிய முடியும் என்றும் அறிந்தார் போலும்.பண்டிதரின் பன்முகம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அயோத்தி தாசரின் காலம் என குறிக்கலாம். தமிழ் அறிவு, சமூக அறிவு, மருத்துவ அறிவு, ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு புரட்சி, திராவிட எழுச்சி, தமிழ் உணர்வு, இன உணர்வு என்று அனைத்திலும் பண்டிதரே தமிழகத்திற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே தத்துவ நோக்கில் வழிகாட்டி வழி நடத்தினார் என்றால் மிகையல்ல. தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆழமாக கற்றுணர்ந்து தமிழ் அறிஞராக இருந்தார். இவர் கற்ற பழந்தமிழ் நூல்கள் இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கல்வியும் புலமையும் ஆதிக்க வல்லுறுக்களின் வன்கருத்தியலை சிதைத்தது. அனைத்து துறைகளிலும் கற்று வல்லவராக இருந்தார் என்பது மட்டுமல்ல களப்பணியாற்றி பூர்வகுடிமக்களின் உரிமையும் பெற்றுத் தந்தார். 1870களில் தமிழகத்தில் பதிவுச் செய்யப்படாத பல ஆதித்திராவிட சங்கங்கள் இயங்கி வந்தன. 1870-ல் அத்வைதானந்த சபையை நீலகிரில் நிறுவினார். 1882 தியோசபிகல் சொசைட்டி அடையாற்றில் இயங்கி வந்தது. இந்த சொசைட்டியில் ஹென்றி ஆல்காட், அயோத்தி தாசர், பேரா பி.லட்சுமிநரசு என வேத எதிர்ப்பு போராளிகள் ஒன்றிணைய தியோசபிகல் சொசைட்டி வழிவகுத்தது. 1890 இல் திராவிட சங்கத்தை நிறுவினார். திராவிடர்களை அமைப்பாக்குகின்ற பணியை அயோத்திதாசர் இச்சங்கத்தின் மூலம் செய்தார்.
                 1891 இல் திசம்பர் 1 ஆம் தேதி திராவிட சங்கத்தின் முதல் மாநாடு நீலகிரியில் அயோத்திதாசர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார பகிர்வு, சமூக இழிவு நீங்க போராடுவது என அத்தீர்மானங்கள் முன்மொழிந்தன. இந்த மாநாடே ஆதிக்க வர்கத்தின் அடிதளத்தை அசைத்தது. 1892 அன்றைய ஆளும் ஆங்கிலேயே அரசுக்கு அயோத்தி தாசர் இரண்டு கொள்கைகளை முன்வைத்தார். (i) பூர்வகுடி மக்களுக்கு 4 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். (ii) பூர்வகுடி மக்களுக்கு புறம்போக்கு நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையே பின்னாளில் தலித்துக்களுக்கு பஞ்சமி நிலம் ஆங்கில அரசு வழங்க தோன்றலாய் அமைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஆல்காட் (Colonal Hendry Olcott) அவர்களின் நட்புறவு அயோத்தி தாசர் களப்பணிகளுக்கும், அவர் மேற்கொண்ட உரிமைப் போர்களுக்கும் மேலும் வலு சேர்த்தது. 1894-ல் ஆல்காட் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியோடு சென்னையில் ஐந்து இடங்களில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவி சாதி இந்துக்களின் கல்வி கற்கும் பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது கல்வி அருமை தெரிந்த அயோத்தி தாசர் தலித்துக்களின் கல்வி உரிமையை மீட்டெடுத்தார்.பௌத்த மாற்றம் இந்துமத தத்துவங்கள், தலித் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதை நன்குணர்ந்தார் அயோத்தி தாசர். தன் சமூக மக்கள் சமூக இழிவுகளுக்கு இந்து மதம் உட்படுத்துவதாலும் சதுர்வர்ண சாதி கட்டமைப்பை கட்டுடைக்கவும், சமூகத் தலித்தில் தலித் மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவும் அக, புற, சுதந்திர உணர்வோட தம் மக்களின் வாழ்க்கையை நிலை நிறுத்த அயோத்தி தாசர் பௌத்தத்தை முன்மொழிந்தார். பௌத்த ஆர்வலர்களை நாடியே அவரின் சிந்தனை நகர்ந்தது. 1898 ஹென்றி ஆல்காட்டையும், அனகாரிகா தர்மபாலாவையும் சந்தித்து, தானும் தம் மக்களும் பௌத்த மதத்தை தழுவ இருப்பதாகத் தெரிவித்தார். அதனடிப்படையில் அயோத்தி தாசர், ஆல்காட் பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி.கிருஷ்ணசாமி முதலியோர் 1898-இல் கொழும்புக்கு சென்று பௌத்த சமயத்தைத் தழுவி தலித் மக்களின் விடுதலைக்கும், தலித் மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை நிலை நிறுத்தினார். சென்னை ராயப்பேட்டையில் 1898-இல் இதன் இந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார். விகார்களையும் நிறுவி பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழகத்தில் கி.மு.300 முதல் கி.பி.600 வரை எழுச்சியோடு இருந்த பௌத்தத்தை இந்து மதம் தன்வயப்படுத்தியது. அந்தப் பண்பாட்டின் மீட்டெடுப்பை 1898-இல் அயோத்தி தாசர் மீட்டெடுத்து பௌத்தத்தை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெறச் செய்தார். தமிழகத்தில் திராவிட உணர்வையும் பகுத்தறிவு உணர்வையும் ஆழமாக உள்வாங்கி கொண்டு, பிராமணீய எதிர்ப்புக்கிடையில் பத்திரிக்கை நடத்தி காட்டினார்.தமிழ்த் தேசியத் தந்தை ''தமிழ்த் தேசியத் தந்தை'' என்று அயோத்தி தாசர் அவர்களை முன்னிறுத்தலாம். 1907 இல் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தி வார ஏட்டை தொடங்கினார். ராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 முதல் வெளிவந்து தமிழகத்தின் மூட வழக்காறுகளை, புராணங்களை, இந்துமத வெற்று கருத்துக்களை எதிர்த்து பிராமணியத்தின் வேரறுக்க தமிழன் வெளிவந்தது.
                 திராவிடன் ''தமிழன்'' என்கிற உணர்வை திராவிடர்களுக்கு உணர்த்தவும், தமிழனின் பண்பாட்டை காக்கவும், தமிழகத்தில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தத்துவார்த்த, பகுத்தறிவு வழிக்காட்டவும் அயோத்தி தாசர் வெற்றிகரமாக தமிழன் இதழை 19.06.1907 முதல் 1914 வரை நடத்தினார். பிறகு தமிழன் இதழை அடுத்த தலைமுறையினர் நடத்தினர்.அயோத்திதாசர் இதழின் வாயிலாக பூர்வ குடிமக்களே தமிழகத்தில் பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும், இன உணர்வையும், உணர்த்தினார்கள் என்ற வரலாறையும் மற்றும் சாதியத்தின் வேர் அறுக்க அஞ்சாத சிங்கங்களாக இருந்தார்கள் என்ற வரலாற்றை தமிழகத்து அறிவுலகம் மறைத்தது என்பது (அயோத்தி தாசர்) வரலாற்று இரட்டிப்பாகும்.அயோத்திதாசரின் சில படைப்புகள் அயோத்தி தாசர் 1912-இல் புத்தரின் வரலாற்றை ''புத்தரது ஆதிவேதம்'' என்ற நூலாக எழுதி பெரும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு அரிச்சந்திரன் பொய்கள், இந்திரர் வேத சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு யதார்த்த பிராமண வேதாந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம் விபூதி ஆராய்ச்சி என்று முதலிய பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார். தன் தலித் இனத்தின் வரலாற்றை தாங்கியும், இந்த இனத்தில் இழிவுகளை ஆய்ந்து தன் இழிவுகளை துடைக்க முற்படாத எவரும் வரலாற்றில் இடம்பெற மாட்டார்கள். தன் இனத்தின் மீது ஏவப்பட்ட சமூக கொடுமைகளை கண்டு தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கு இடையில் தன் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்து தன் சமூக விடுதலைக்கு பௌத்தத்தை முன்வைத்து, தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றிய அயோத்திதாசர் அவர்கள் 05.05.1914-இல் பரிநிர்வாணம் அடைந்தார். அவரின் கொள்கையைப் பரப்பவேண்டும். அவரது வரலாற்றை வன்கொடுமை செய்தவர்களின் அடுத்த தலைமுறை அவரது கொள்கைகளைப் படிக்க வேண்டும். தலித் பூர்வகுடிமக்களின் முழு வரலாறாகவும் தமிழகத்தில் அயோத்தி தாசர் விளங்குகிறார். திராவிட பண்பாட்டின் தாயாகவும், தமிழ்த் தேசியத்தின் தந்தையாகவும், அயோத்தி தாசர் விளங்குகிறார் என்பதை தமிழகம், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தலித் அறிஞர்களும், ஆய்வாளர்களும் அயோத்திதாசரின் கருத்தை மக்கள் மன்றங்களுக்கு எடுத்துச் செல்வதும், அவரின் சிந்தனைகள் எளிய பிரதிகளாக அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்துவதும் உடனடித் தேவையாகும். ஒரு நூற்றாண்டுகளாக தாசரின் வரலாற்று, அவரின் நூற்றாண்டு இறுதியில் தான் பரப்புரையானது என்பது இந்த சமூகத்திற்கு மேலும் செய்த சிந்தனை வன்கொடுமையாகும். இனி மறைந்த வரலாறுகளை மீட்டெடுப்போம் அயோத்தி தாசரின் பௌத்த நெறியில் அணிவகுப்போம்.

அயோத்திதாசர் சிந்தனைகள் -1pdf | அயோத்திதாசர் சிந்தனைகள்

3.ரெட்டைமலை சீனிவாசன்
(07/07/1859-17/09/1945)

 

 
தலித் மக்களுக்காக போராடிய போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் !!!!  
" நானும் டாக்டர் அம்பேத்காரும் நகமும்சதையாக இருந்து தலித்களுக்குபாடுபட்டோம் "

"இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும்நம்மை முன்னேற்ற வந்ததாக சொல்வதுஅவர்களின் சுயநலமாகும். நம்முடையஇடைவிடாத சுயமுயற்சியால் முன்னேறிவந்து கொண்டிருக்கிறோம் "
ரெட்டமலை சீனிவாசன்


செனைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டுவட்டத்தில் கொளியாலம் என்னும்கிராமத்தில், ரெட்டமலை ஆதிநாயகிதம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 7, 1859 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியஅரசியலுக்கு காந்தி வருவதற்கு முன்பே, இமண்ணில் தீண்டாமை, சாத்தியகொடுமைகளை எதிர்த்து போராடியவர்

1887 ஆம் ஆண்டு அரங்க நாயகியை மணந்தார்

18891 ஆம் ஆண்டு பறையர் மஹா ஜன சபையை நிறுவி தீண்டாமைகொடுமையை எதிர்த்தார்

1893 - பறையர் என்ற வார இதழை துவக்கி தலித்மக்களின் விடுதலைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

1894 - பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்தினார்

1895 - சென்னைக்கு வருகை தந்த ஆளுநர் லார்ட் எல்ட்சின் அவர்களிடம்தமிழகத்தில் நிலவிய தீண்டாமை, சாத்திய கொடுமைகளை குறித்தும், தலித்கள்சரிசமமாக வாழ கல்வி , வேலைவாய்ப்பு அரசியல் பற்றி ஒரு பெரிய கோரிக்கைவிண்ணப்பம் ஒன்றை நேரடியாக கொடுத்தார்
1897 - சென்னை விக்டோரியா மண்டபத்தில் பூர்வீக குடிமக்களின் மாநாடுநடத்தினார்

1899 - சென்னையில் உள்ள வெள்ளைக்காரர்களின் வீட்டில் பட்லராக பனிசெய்தவர்களின் குறைகளை களைய இரவு 11 -மணிக்கு பிறகு பொது கூடம்ஒன்றை சென்னை ராயபேட்டையில் உள்ள தூய வெசுலியன் ஆலயத்தில் நடத்திஆட்சியாளர்களுக்கு தெரிவித்தார்

1901 - இங்கிலாந்து சென்றார் 1904 - தென் ஆபிரிக்க , நேட்டலில் உள்ள நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பலராக பனி புரிந்தார் .

அங்கே பணியாற்றி கொண்டிருந்த காந்தி அவர்களுக்கும்மொழிபெயர்பாளராகவும் இருந்தார் அபோதுதான் அவருக்கு தமிழ் கற்றுகொடுத்தார் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்கு கற்றுகொடுத்தார்.

1921 மீண்டும் சென்னைக்கு வந்தார் அப்போது அரசியலாக பரிணமித்துள்ளநீதிகாட்சியில் இணைந்து பணியாற்றினார்.

1923 ஆண்டுமுதல் 1938 ஆண்டுவரை சென்னை சட்டப்பேரவை உறுபினராகஇருந்து பணியாற்றினார் அப்போது தலித்களை பிற சாதி இந்துக்கள் போல் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். பொதுச்சாலையில் நடக்கவும் பொது கிணற்றில்தண்ணீர் எடுக்கவும் பொது இடங்களில் அரசு அலுவலங்களில் நுழைவதற்குஉரிமை அளிக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் எனசட்டசபையில் உரையாற்றினார். இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் 1925ஆண்டு புனித ஜார்ச் கோட்டை அரசுப்பதிவிதழ் 1 A / 2660 ( No . L .X .M ) இன் கீழ்தலித் மக்களும் பிறரைப்போல சமமாக மதிக்கப்பட வேண்டுமென அரசுஆணையிட்டது .

1926 ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின்சேவையை பாராட்டி அவருக்கு " ராவ்சாகிப்" என்ற பட்டத்தை அரசு வழங்கிகௌரவித்தது.

1928 தலித்கள் கல்வியால் தான் முனேற முடியும்என்ற அடிப்படையில் ஒரு "கல்வி கழகத்தை"ஆரம்பித்தார். அதன்மூலம் ஏழை மாணவர்களைகல்வி கற்கவும் செய்தார்

1928 ஆண்டு ரெட்டமலை சீனிவாசனின்துணைவியார் அரங்கநாயகி அம்மாள் தமது 60வயதில் இயற்கை எய்தினார். அம்மையாரின்கல்லறையில் ..தீண்டப்படாத மக்கள்பொதுச்சாலையில் நடக்கவும், பொது கிணற்றில்குடிநீர் எடுக்கவும் உரிமை வாங்கி தந்த 1925 ஏப்ரல் 28ஆம் நாள் அரசு வெளியிட்ட தீண்டாமைஒழிப்பிற்கான அந்த அரசு ஆணைபொறிக்கப்பட்டுள்ளது.

1930 - லண்டன் முதல் வட்ட மேசை மாநாட்டிலே 5 ஆவது மன்னரிடம்உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மன்னரோடு கைகுலுக்கினார்கள். ஆனால் ரெட்டமலை சீனிவாசன் தன கோர்ட் பக்கெட்டில் " ராவ்சாகிப் ரெட்டமலை சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்" என பொறிக்கப்பட்டஅடையாள அட்டையை அணிந்திருந்தார். மன்னர் கை குலுக்க முன்வந்த போதுரெட்டமலை சீனிவாசன் அதை மறுத்து "நீங்கள் என்னை தொட்டால் தீட்டுஉங்களுக்கு ஒட்டிக்கொள்ளும் என்ற நிலை இருகிறதே! நான் எப்படி உங்களுக்குகை கொடுக்க முடியும்? " என கேட்டார்." இந்தியாவில் உள்ள தீண்டாமை,சாதிகொடுமை, பற்றி உங்களோடு விவரிக்க எனக்கு தனியாக நேரம் கொடுக்கஉறுதியளிதால் நான் உம்மோடு கை குலுக்கிறேன்" மன்னர் சரி என்றதும்அருகில் சென்று மன்னரோடு கை குலுக்கினர் இம்மாநாட்டில் தீண்டபடாதமக்களுக்கு அரசியல் அதிகாரம், கல்வி கற்க உரிமை, வயது வந்தோர்அனைவருக்கும் வாக்குரிமை, சட்ட சபையில் அரசியல் பிரதிநித்துவம் போன்றமிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

1931 - ரெட்டமலை சீனிவாசன் தலித்மக்களுக்கு செய்த பணிகளை பாராட்டி அரசுஅவருக்கு " ராவ் பகதூர் " என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

1931 செப்டம்பர் - இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டுபுரட்சியாளர் அம்பேத்கருக்கு உற்ற துணையாக இருந்து தலித்மக்களின்விடுதலைக்கு போராடினார். தீண்டாமை ஒழிப்பு, கல்வி உரிமை, அரசியல்,பொருளாதார உரிமைகள், தனித்தொகுதி ஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமைபோன்ற கோரிக்கைகளை ஏற்றுகொண்டு உடனே மன்னர் அரசனை பிறபித்தார்.

1932 செப்டம்பர் 20 ஆம் நாள் ஐந்தாம் ஜார்ச் மன்னர் அளித்த அரசு ஆணையாகியதீண்டபடாத மக்களுக்கு வழங்கப்பட தனித்தொகுதி இரட்டை வாக்குரிமையைஎதிர்த்து காந்தி ஏரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.அணைத்து சாதி,மத தலைவர்கள் ஒன்று கூடி புரட்சியாளர் அம்பேத்கரிடம்காந்தியை காப்பாற்ற வேண்டுமென கேட்டுகொண்டனர் அதனடிப்படையில் 1932செப்டம்பர் 26 ஆம் நாள் அனைவரும் ஒன்றுகூடி பூனாவில் தலித் மக்களுக்குகிடைத்த தனி தொகுதி உரிமையில் சில மாற்றங்களுடன் ஒப்புக்கொண்டார்.

1936 ஜனவரி 1 இல் ரெட்டமலை சீனிவாசன் சமூக பணிகளை பாராட்டி அரசுஅவருக்கு "திவான் பகதூர்" பட்டம் கொடுத்து ஊக்கிவித்தது.

1937 சென்னை மாநில முதல்வராக இருந்த போது, ஜமின் முறை ஒழிக்கப்பட்டபோது ஜமின்தரர்கள் நிலங்களை உழவர்கள், விவசாயிகள் கைப்பற்ற வேண்டும்என அறிக்கைவிட்டார்.உழுபவனுக்கே நிலம் சொந்தமென முழங்கினார்.

1937 ரெட்டமலை சீனிவாசனின் தொண்டுகளை பாராட்டி திரு வி க அவர்கள்"திராவிடமணி" என்ற பட்டத்தை வழங்கினார்

1938 - ஆகஸ்ட் 27 ஆம் நாள் தீண்டபடாத மாநில அட்டவனைபட்டியல்முன்னேற்ற ஆலோசனை வழங்கல் வாரிய அமைப்பின் ஆலோசகராகநியமிக்கப்பட்டார்

50 ஆண்டுகளுக்கு மேல் தலித் விடுதலைக்காக தொடர்ந்து அரும்பணியாற்றியமாபெரும் போராளி ரெட்டமலை சீனிவாசன் அவர்கள் தனது 85 வயதில் 1945செப்டம்பர் 17 ஆம் நாள் இயற்கை எய்தினார்.


4.அப்பாதுரையார்
(1890-21/01/1962)


இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.
இவர் 1890-இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங் கொண்டிருந்தார் என்பார்கள்.
1907-இல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு, தமிழகத்து முதல் பகுத்தறிவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் சென்னை ராயப்பேட்டையிலிருந்து வெளியிடப் பட்டுவந்த ‘தமிழன்’ பத்திரிகையும்,அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்கக் கூட்டங்களே காரணமாகும் - சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகியத் துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாயிருந்தது. 1912 லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகை களிலும், சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகை யான அரிய கட்டுரைகளை எழுதி புகழ் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் கிருத்துவ சமயத்தை ஏற்றியிருந்த இவர் 1911-இல் தமது 21-வது வயதில் பௌத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு ‘இளைஞர் பௌத்த சங்கத்தை’ கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறு நூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அறியைக்கக் கூட்டங்களை நடத்தினார். இவரது நீத்தார் நினைவு நாளில் “எங்களுக்கெல்லாம் முன்பே பகுத்தறிவு பிரச்சாரம் செய்து மக்களை திருத்தியவர் இவர்” என்று பெரியார் ஈ.வெ.ரா. அவர்களால் புகழப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1917-இல் மாண்டேகு சேம்ஸ் போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை வளக்கியது, 1924-இல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்த்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது, ஆகியவை இவரது தொண்டின் சிறப்புகளாகும். 1926-லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் “தமிழன்” பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். புத்தர் அருளறம் என்ற நூலினை படைத்துள்ளார். 1930-லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும். 1962-ல் உடல்நலங்குன்றி பஞ்சஸ்கந்த பிரிவினையடைந்தார்.


5.M.C.ராஜா
(17/06/1885-28/08/1945)

                 சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய வரலாற்றில் தீண்டாத மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர்கள் பலர் தமிழ் நாட்டில் தான் தோன்றியிருக்கிறார்கள். அயோத்திதாசப் பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.ராஜா என அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அம்பேத்கருக்கு முன்பே தீண்டாதார் அரசியல் எழுச்சியோடு விளங்கிய பகுதியாகத் தமிழகம் இருந்திருக்கிறது. 17ஆம் நூற்றாண்டிலேயே இங்கிருந்த தீண்டாத மக்கள் கூட்டாகச் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதே வேளையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மை ஒடுக்க முற்பட்டபோது அவர்களின் போலீஸ் படையைத் தாக்கி விரட்டியும் அடித்திருக்கிறார்கள். அத்தகையதொரு பின்புலத்தில் இருந்து தலைவராக உருவானவர்தான் எம்.சி.ராஜா.
                 எம்.சி.ராஜாவின் தந்தை சின்னத்தம்பி அவர்களும், சென்னையில் பிரபலமான தலைவராக விளங்கியவர்தான். எம்.சி.ராஜா, வெஸ்லி மிஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு சென்னை கிறித்தவ கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்கே கிரிக்கெட் அணியின் தலைவராகவும் எம்.சி.ராஜா விளங்கினார். கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்போது சென்னையில் இரவு பள்ளிகளை ஆரம்பித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்தார்.
                  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேல் படிப்பு படித்திட ஆதிதிராவிட மாணவர்களுக்கு அந்த நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. அதை எதிர்த்து போராடி அந்தத் தடையை உடைத்தெறிந்தார். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் காரணமாக தீண்டாத வகுப்பினரிடையே இருந்து ஒருவரை சென்னை மாகாண மேலவைக்கு நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்தது. அதற்கு சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி 1919 ஆம் ஆண்டு எம்.சி.ராஜாவை அன்றைய கவர்னர் வில்லிங்டன் பிரபு சென்னை மாகாண மேலவை உறுப்பினராக நியமித்தார். இந்திய அளவில் சட்ட மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் எம்.சி. ராஜாதான்.கல்விப் பணி செய்வதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது.1921 ஆம் ஆண்டில் எம்.பழனிச்சாமி என்பவரோடு இணைந்து சென்னையில் மாணவர் விடுதி ஒன்றை நிறுவினார். அதன் பெயர் பின்னர் பாடிசன் ஹாஸ்டல் என மாற்றப்பட்டது. தற்போது அது எம்.சி ராஜா விடுதி என்ற பெயரில் அரசாங்கத்தால் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.1936ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் திராவிடப் பள்ளி என்கிற கல்வி நிலையம் அவரால் ஆரம்பிக்கப்பட்டது எனவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தனது தலைமையில் சாரணர் படை ஒன்றை அவர் உருவாக்கினார் எனவும் தெரிய வருகிறது.
                  ஆதிதிராவிட மகாசன சபையின் தலைவராக பொறுப்பேற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளின் காரணமாக 1920களில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமான தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவராக விளங்கினார். 1928 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயணம் செய்த சைமன் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் வலுவான இயக்கமாகத் திகழ்ந்த ஆதி இந்து மகா சபாவின் சார்பில் சைமன் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எம்.சி.ராஜாதான் எங்கள் தலைவர் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.எம்.சி.ராஜாவின் புகழ் இந்திய அளவில் பரவியிருந்ததற்கு இது ஒரு உதாரணமாகும்.
                 இந்தியாவில் அதிகாரமாற்றத்தை ஏற்படுத்தவும், சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களையும் சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எம்.சி.ராஜா எடுத்துரைத்தார். 1921ஆம் ஆண்டு சென்னை பி அண்டு சி ஆலையில் ஏற்பட்ட வேலை நிறுத்தம் தமிழகத் தொழிலாளர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.முதலில் சுமார் அறுநூறு தொழிலாளர்கள் அதில் பங்கேற்றனர்.பிறகு அது மிகப்பெரும் வேலைநிறுத்தமாக மாறியது.அந்த வேலை நிறுத்தத்தில் ஆதி திராவிடர்கள் கலந்துகொள்ளாமல் வேலைக்குச் சென்றனர். அதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள் அவர்கள்மீது வன்முறையை ஏவினார்கள்.ஆதி திராவிட மக்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.அப்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் சுமார் இரண்டாயிரம்பேர் இருந்தனர் என்பதிலிருந்தே அந்தத் தாக்குதலின் கொடுமையை நாம் புரிந்துகொள்ளலாம். அப்போது ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி அரசாங்கமோ ஆதிதிராவிட மக்களை வன்முறையாளர்களாக சித்திரித்தது மட்டுமின்றி அவர்களையெல்லாம் சென்னை நகரின் எல்லைக்கு அப்பால் வெளியேற்றிட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைக் கடுமையாக விமர்சித்து பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களின் உரிமைகளுக்காக எம்.சி.ராஜா போராடினார்.
                 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதியுடன் கூடிய இரட்டை வாக்குரிமை வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் ஏற்றுக்கொண்டவர் எம்.சி.ராஜா. ஆனால் பின்னர் அதே கோரிக்கை அம்பேத்கர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டபோது அதை எம்.சி.ராஜா எதிர்த்து கூட்டு வாக்காளர் தொகுதி முறையை ஆதரித்தார் என்பது ஒரு முரண்நகையாகும்.1929 ஆம் ஆண்டு செபடம்பர் 30ஆம் தேதி இந்திய அரசின் மையக் கமிட்டிக்கு சமர்ப்பித்த மனுவில் அவர் தனி வாக்காளர் தொகுதி கோரிக்கை பற்றி வலியுறுத்தியிருந்தார்: ’ தனி வாக்காளர் தொகுதிகளை உருவாக்குவதன் மூலமே நேரடித் தேர்தலையும் உத்தரவாதப்படுத்தலாம்,போதுமான பாதுகாப்பையும் பெறலாம்.’ என அவர் கூறினார். ‘அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம்.பிரிவினை உணர்வைத் தூண்டி தேசியத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துவிடும் என அதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஆனால் அதனால் வரும் நன்மைகள் எதிர்ப்பின் அளவைவிட அதிகமானவை.தனிவாக்காளர் தொகுதிமுறை என்பது இந்தியாவுக்குப் புதியதல்ல.ஏற்கனவே முஸ்லீம்கள், சீக்கியர்கள்,இந்திய கிறித்தவர்கள்,ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கு அந்த உரிமை உள்ளது.அது அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தந்துள்ளது’ என எம்.சி.ராஜா அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
                  அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது கிடையாது.படித்தவர்கள், சொத்து உள்ளவர்கள் ஆகியோருக்குத்தான் வாக்குரிமை இருந்தது. சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மக்கள்தொகை அப்போது சுமார் அறுபத்தைந்து லட்சமாக இருந்தது. ஆனால் அதில் 56756 பேருக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்தது என்பதை எடுத்துக்காட்டிய எம்.சி.ராஜா வாக்காளர்களுக்கான தகுதியைக் குறைக்கவேண்டும் எனவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தனிவாக்காளர் தொகுதி முறையை வலியுறுத்திவந்த எம்.சி.ராஜா அதை பிரிட்டிஷ் அரசு வழங்கவிருந்த நேரத்தில் தனது நிலையை மாற்றிக்கொண்டு கூட்டுத் தொகுதி முறைக்கு ஆதரவு தெரிவித்தார்.அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நிலைபாட்டுக்கு எதிராக இந்து மகா சபையின் தலைவர் மூஞ்சே என்பவரோடு அதற்காக ஒப்பந்தம் ஒன்றையும் செய்துகொண்டார்.அதுபோலவே கோயில் நுழைவு தொடர்பாக அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட நிலையையும்கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக காந்தியடிகளின் அணுகுமுறையை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். ’ஆதி திராவிடர்கள் அடைந்துவரும் அபிவிருத்தியைக்கண்டு இந்துக்கள் தங்கள் வர்ணாசிரம அதர்மத்துக்குள் இவர்களையும் இழுத்துச் சேர்த்து ஐந்தாம் வருணத்தவராக அமைத்து அடக்கியாள ஆதிதிராவிடர்கள் சமூகத்தை அழித்து அவர்களும் ஜாதி இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களென ஜாதி இந்துக்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ளவேண்டுமென்னும் கருத்தோடு ஆலயப் பிரவேசமென்னும் கபடமான இயக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கலென்றே சொல்லலாம்’ என இரட்டைமலை சீனிவாசன் அதை வர்ணிக்கிறார். சென்னை மாகாண சபையில் அந்த மசோதா வந்தபோது முப்பது ஆதி திராவிடப் பிரதிநிதிகளில் 28பேர் ஆலயப் பிரவேசம் வேண்டாமென வாக்களித்ததாகவும் இரட்டைமலை சீனிவாசன் கூறியுள்ளார்.அந்த மசோதாவை ஆதரித்த பிரபலமான ஆதி திராவிடத் தலைவர்கள் எம்.சி.ராஜாவும் சுவாமி சகஜாநந்தாவும் மட்டும்தான். வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பிரதிநிதிகளாக அம்பேத்கரும்,இரட்டைமலை சீனிவாசனும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்தே எம்.சி.ராஜா இப்படி எதிரான நிலையை மேற்கொண்டதாக அம்பேத்கர் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.காந்தியின் நிலையை ஆதரித்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை அவர் மறந்துவிடவில்லை.தீண்டாமை ஒழிப்புச் சட்ட மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதாவும் அவரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
                 ஆதி திராவிட மகா ஜன சபையின் கௌரவச் செயலாளராகவும், தென்னிந்திய இரண்டாவது ஆதி திராவிடர்கள் மாநாட்டின் தலைவராகவும்,கூட்டுறவுச் சங்கங்களின் கௌரவத் துணைப் பதிவாளராகவும்,மாகாண , மத்திய சட்டமன்றங்களின் உறுப்பினராகவும்- இப்படி பல்வேறு பதவிகளை வகித்த எம்.சி.ராஜா ஆதிதிராவிட மக்களின் நன்மைக்காக எழுதியவை யாவும் ஆங்கிலத்திலேயே உள்ளன. 1927 ஆம் ஆண்டில் அவரால் எழுதப்பட்டு தி ஹக்ஸ்லீ பிரஸால் வெளியிடப்பட்ட The oppressed Hindus என்ற நூலை அம்பேத்கர் சிந்தனைக் கூடத்தினர் தமிழாக்கம் செய்து 1968 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர்.


6.மகாத்மா அய்யன்காளி
(28/08/1863-1941)

தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை பெற்றுத் தந்த கேரளப் போராளி அய்யன்காளி (Ayyankali) பிறந்த தினம் ஆகஸ்ட் 28. அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
# கேரளத்தின் திருவிதாங்கூருக்கு உட்பட்ட பெருங்காட்டுவிளா என்ற ஊரில் (1863) பிறந்தவர். தந்தை விவசாயக் கூலித் தொழிலாளி. தன் குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதைப் பார்த்து சிறு வயதிலேயே வேதனை அடைந்தார்.
# பள்ளிக்கு சென்று படிக்க முடியாவிட்டாலும், கட்டுடலும் நல்ல உயரமும் கொண்டு மிகுந்த வலிமையுடன் திகழ்ந்தார். கல்வி அறிவு, பொருளாதாரப் பின்புலம் இல்லாவிட்டாலும்கூட யாருக்கும் எதற்காகவும் அஞ்சாத வீரனாக இருந்தார். தவறுகளை துணிச்சலுடன் தட்டிக்கேட்டார்.
# புராணங்களில் இருந்து சமுதாய விடுதலைக்கான பல நல்ல விஷயங்களை எடுத்து நாடகங்கள் நடத்தி, தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தூய்மையான ஆடை, தலைப்பாகை அணிந்து கம்பீரமாக வலம் வந்தார். ஒரு வில் வண்டி வாங்கி காளைகளைப் பூட்டி, அனுமதி மறுக்கப்பட்ட தெருக்களில் சென்றார். எதிர்த்தவர்களை தன் வலிமையால் அடக்கினார்.
# மக்களை ஒன்று திரட்டி, சாதிக் கொடுமைகளை எதிர்த்து இவர் நடத்திய போராட்டங்கள் கேரளம் முழுவதும் எதிரொலித்தன. அடிமைப்பட்டு கிடந்த மக்கள் தங்களை மீட்டெடுக்க வந்த தலைவராக இவரைப் போற்றினர்.
# ஓய்வு இல்லாத கட்டாய உழைப்பு முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை1904-ல் தொடங்கினார். கேரளத்தில் முதன்முதலாக நடந்த இந்த விவசாயத் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்று, ‘ஞாயிற்றுக்கிழமை ஓய்வு’ உள்ளிட்ட பல உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்தது.
# ஜாதிபேதமற்று எல்லா குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளிக்கும், தென்னிந்தியாவின் முதல் அரசுப் பள்ளிக்கூடம் இவரது முனைப்பால் தொடங்கப்பட்டது. தன் சமூக மக்களை ஒன்றுபடுத்தி ‘சாதுஜன பரிபாலன சங்கம்’ என்ற அமைப்பை 1905-ல் தொடங்கினார். ‘சாதுஜன பரிபாலன்’ என்ற மாத இதழையும் தொடங்கினார்.
# தன் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மற்ற சமூகத்தினரும் உணரவைத்தார். 1912-ல் மூலம் பிரஜாசபை என்ற அன்றைய சட்டமன்றத்தின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அப்பதவியில் 20 ஆண்டுகள் இருந்து தொண்டாற்றினார்.
# தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையைத் தகர்க்கும் போராட்டத்தை தொடங்கினார். 1915-16ல் இப்போராட்டம் வெகுவாகப் பரவியது. ‘கல்மாலை அறுப்புப் போர்’ என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் இப்போராட்டம் வெற்றி பெற்றது. பெண்கள் தங்கள் கல்மாலைகளை அறுத்தெறிந்துவிட்டு மேலாடை அணியத் தொடங்கினர்.




7.ஜாண் ரத்னம்(1846-1942)


1885 இல் "திராவிட பாண்டியன் " என்ற தமிழ் வெளியிட்டை துவங்கித் திறமையான வாதங்களால் மக்களை விழிப்படையச் செய்தவர்.
1892 இல் "திராவிடர் கழகம்" என்ற அமைப்பை துவங்கினார்.
கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகியவைகளால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமே நல்ல மாற்றமாகயிருக்கும் என்று எண்ணி 1886 இல் ஒரு மாதிரி பள்ளியை நிறுவி பயனிருப்பதை அறிந்து 1892 இல் ஆண் -பெண் இருபாலரும் படிக்க சென்னை ஆயிரம் விளக்கத்தில் பெரியதொரு கல்விக்கூடத்தை அமைத்தார் மேலும் சித்திரம், தச்சு, தையல் போன்றவைகளைக் கற்கும் தொழிற்கல்வி கூடம் ஒன்றையும் மாணவர் விடுதியையும் 1889 இல் தோற்றுவித்தார்.
. பழங்குடி மக்களின் வாழ்விலும் வளத் திலும் அக்கறை கொண்டிருந்த இவர் அவர்களை ஓரணியில் திரட்ட இணைப்புப் பாலமாக கூடுமிடம் ஒன்றை சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் சமூகக் கூடம் அமைக்க முயன்றார். பழங்குடி மக்களுள் எழுந்த கிறிஸ்தவர் , பௌத்தர், சைவர், வைணவர் போராட்டங்களால் இது தடைபட்டு விட்டது.


8.கக்கன்
(18/06/1908-23/12/1981)

                 உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.
உயர் திரு.கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது .
மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.
மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.
மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது.
இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.
சுதந்திர போராட்டம்
காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.
தமிழக அரசியல்
இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு க்க்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.
பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.
கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.
விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.
கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.
டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.


9.லச்சுமி நரசு(1860-1934)


லட்சுமி நரசு: அம்பேத்கரிய பவுத்தத்தின் முன்னோடி! -ஜி. அலாய்சியஸ் பொக்காலா லட்சுமி நரசு - இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் வாழ்ந்த பவுத்த முன்னோடிகளில் முக்கியமானவர். ஆசிய அறிஞர்களால் அக்காலத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வந்த பவுத்த மரபுகளில் இருந்து காலத்திற்கேற்ற, விடுதலை அளிக்கும் மதத்தை, மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அக்காலத்திய பிற பவுத்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்களான அயோத்திதாசர், எம். சிங்காரவேலு ஆகியோருடனான தொடர்ந்த கலந்தாய்வுகளோடு, நரசுவின் மத உருவாக்க முயற்சி, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நடைபெற்றது. மதம் என்பதற்கு இன்று அளிக்கப்படும் விளக்கத்தின் அடிப்படையில் மற்றொரு மதத்தை நிறுவுவது, அவர்களின் நோக்கமல்ல. மாறாக, காலத்திற்கேற்ப பகுத்தறிவு சார்ந்த, சுதந்திரமான உலகப் பார்வையும், ஒழுக்க நெறியும் கொண்டு நவீன காலத்திற்குள் நுழையும் ஆண் பெண்களுக்கிடையே சகோதர உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் வளர்க்கவும் வழங்கவுமான ஒரு நெறியை நிறுவுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
நரசுவின் குடும்பப் பின்புலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நம்மிடம் இருக்கும் ஆதாரங்கள், அவருக்குப் பிறகு தென்னிந்திய பவுத்த சங்கத்தின் சென்னை பெரம்பூர் கிளைக்குப் பொறுப்பேற்றவரான மறைந்த என். ஜீனராஜு என்பவர் சேகரித்தவையே ஆகும். அவற்றில் பரவலாகப் பேசப்பட்டு, அறியப்பட்டு வந்த வாய்மொழித் தகவல்கள் மற்றும் அக்காலத்திய இதழ்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்த செய்திகள் ஆகியவையே இருந்தன. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திலிருந்து தலைநகருக்கு குடி பெயர்ந்து, சென்னை நீதிமன்றங்களில் புகழ் பெற்ற வழக்கறிஞராக விளங்கிய பொக்காலா செல்லா நாயனம்காரு என்பவரின் மகனாக லட்சுமி நரசு பிறந்தார். அவருக்கு ஆண்டாள் அம்மாள் என்ற சகோதரியும், கிருஷ்ணசாமி, ராமானுஜம் மற்றும் பாஷ்யம் என்று மூன்று சகோதரர்களும் உண்டு.
1911இல் சென்னையில் நடந்த ரயில் தீ விபத்தில் ராமானுஜமும் பாஷ்யமும் மரணமடைந்தனர். லட்சுமி நரசு 1861இல் பிறந்து, அறிவியல் கற்று, சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெண்கள் நலச் சங்கத்தின் மூலம் பொது வாழ்வில் செயலாற்றி வந்த ருக்மணி அம்மாளை மணந்தார். அவர்களுக்குப் பிறந்த 10 குழந்தைகளில் வெங்கட் என்ற மகனும், வீரலட்சுமி என்ற மகளும் மட்டுமே பிழைத்தனர். வெங்கட் பாரிசில் படித்துக் கொண்டிருக்கையில், அகால மரணம் அடைந்தார். அவர் மறைந்த வேதனை தாங்க இயலாமல் ருக்மணி அம்மாளும் வெகு விரைவில் இறந்து விட்டார். 1925 இல் நரசு, ராம ரத்தினம் அம்மாள் என்றொரு ‘விதவை'யை பெரம்பூர் வியாரத்தில் பவுத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
நரசு பொதுவாக, அவரது சகோதரர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி, தனிமைப்பட்டே வாழ்ந்து வந்தார். சமூக மத மூடப் பழக்க வழக்கங்கள், குறிப்பாக சாதிய அமைப்பு மற்றும் அன்றாட சடங்குகளை எதிர்த்து அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வு, எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுடன் அவர் கொண்டுள்ள நெருங்கிய உறவு ஆகியவற்றை அவரது குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அனைத்து வகையான சமூக இழிவுகளுக்கும் எதிராகவே தொடர்ந்து செயலாற்றி, சமூகத்திற்கு, குறிப்பாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்த அவர், இதய நோய் காரணமாக 1934, சூலை 14 ஆம் நாள் தமது 73 ஆவது வயதில் மரணமடைந்தார். மயிலாப்பூர் சுடுகாட்டில், எளிமையான பவுத்த முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
‘மெட்ராஸ் மெயில்' என்ற ஆங்கில நாளேடு, 23 சூலை 1934 பதிப்பில் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது:
‘அண்மையில் சென்னையில் மறைந்த பேராசிரியர் லட்சுமி நரசு அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவுகளைப் போற்றும் வகையிலும் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் சனிக்கிழமையன்று ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் கூட்டம் கூடிய அந்நிகழ்ச்சிக்கு திவான் பகதூர் ஏ. ராமசாமி (முதலியார்) தலைமை வகித்தார். மறைந்த பேராசிரியருடன் இருபது ஆண்டு காலம் பழகியவரான டாக்டர் சுரேந்திர நாத் ஆர்யா, பேராசிரியரின் அறிவுத்திறன், பொதுநலத் தொண்டு குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், அவரது மறைவின் மூலம் பொதுநலத்திற்கு தொண்டாற்றும் ஒரு முக்கிய ஆளுமையை இழந்துவிட்டோம் என்று குறிப்பிட்டார். திரு. பி. பாலசுப்பிரமணியம், பேராசிரியர் பவுத்தத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் கொண்டிருந்த ஆர்வத்தைப் போற்றினார். இந்த மாநிலத்திலேயே தனது சாதியைத் துறந்து, தான் போதித்தவற்றைத் தானே பின்பற்றிய ஒரே மனிதர் பேராசிரியர் நரசுதான் எனவும் அவர் குறிப்பிட்டார். பவுத்த நோக்கத்திற்காக பேராசிரியர் ஆற்றிய பணிகளை, சென்னை பவுத்த சங்கத்தின் செயலாளரான திரு. மோனியர் தொகுத்தளித்தார். நிகழ்ச்சியின் தலைவர் தனது இறுதியுரையில், பேராசிரியர் சிறந்த குணங்களை உடைய, உறுதியான சுதந்திர மனோபாவம் உடைய ஒரு மனிதராகத் திகழ்ந்தார் எனக் குறிப்பிட்டார். லட்சுமி நரசுவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும், அவரது நினைவுகளைப் போற்ற ஒரு குழு அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”
தொழில் ரீதியாக நரசு ஓர் இயற்பியல் அறிஞர். ஆனால், உண்மையை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகவே அவர் அறிவியலை கண்டார். அவர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1882 ஆம் ஆண்டு மாணவராக இருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது பிஷப் ஹீபர் கல்லூரி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி கிறித்துவக் கல்லூரியில் பின்னர் அவர் இளநிலை விரிவுரையாளராக சேர்ந்தார் எனத் தெரிகிறது. 1892 - 94 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆரணி ஜகிர்தார் தங்கப் பதக்கம் பெற்றவர்களில் ஒருவராக அவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளது. 1894 ஆம் ஆண்டு அவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர் மாணவர்கள் இடையே மிகவும் புகழ்பெற்ற ஆசிரியராகத் திகழ்ந்தார். கல்லூரியின் சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்ட அவர், மாணவர் தங்கும் விடுதிகளின் பொறுப்பாளராகத் திகழ்ந்தார்.
‘தி இந்தியன் ரிவ்யூ' போன்ற இதழ்கள், பெருமை வாய்ந்த கல்லூரி இதழ்கள் போன்றவற்றில் நரசு தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். கல்லூரியின் மூத்தப் பேராசிரியரான மறைதிரு. மொபாத் அவர்கள் இல்லாத நேரங்களில் வகுப்புகள் எடுக்கும் பொறுப்பை நரசு ஏற்றபோது, கல்லூரி நிர்வாகிகளால் அவரது நுட்பமான அறிவுத் திறன் அங்கீகரிக்கப்பட்டது. அவருக்கு அவரது துறையில் இருந்த ஆழமான அறிவின் காரணமாக, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள அவர் தயங்கியதில்லை. ஆங்கிலேயரான பேராசிரியர் வில்சன் என்பவருடன் அவர் நடத்திய துறை சார்ந்த விவாதம், அவரது வாழ்நாள் முழுவதும் மாணவர்களிடையேயும், சக ஆசிரியர்களிடையேயும் பேசப்பட்டதாக இருந்தது.
பிற்காலத்தில் நரசுவின் நூல் ஒன்றினை அறிமுகம் செய்வதற்காக, நரசுவின் வாழ்க்கை குறித்த ஆய்வை மேற்கொண்ட அம்பேத்கரின் கவனத்திற்கு இந்த விவாதம் வந்தது. வலிமை மிக்கவர்களின் திமிரை துணிவுடன் சந்தித்த அவரது நேர்மையான உறுதிதான் - நரசுவின் ஆளுமைக்கு சான்றளிப்பதாகவும், அவரது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் பிரதிபலிப்பதாகவும், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவரை நெருக்கமானவராகவும், அதே வேளையில் அவரது சக ஊழியர்கள் மற்றும் ஆதிக்கவாதிகளிடமிருந்து அவரை ஓரளவிற்கு விலக்கி வைப்பதாகவும் இருந்தது.
1909 ஆம் ஆண்டு நரசு, கிறித்துவக் கல்லூரியிலிருந்து விலகி, பச்சையப்பன் கல்லூரியில் முழு நேரப் பேராசிரியராக சேர்ந்தார். 16 ஆண்டுகள் அவர் அக்கல்லூரியில், பல்வேறு விவாதங்களிலும் நடவடிக்கைகளிலும் பங்கேற்றும், கல்லூரியின் பொது நிர்வாகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும் சிறப்பாகப் பணிபுரிந்தார். ஒரு சிறந்த ஆசிரியராக, அவரது பணிகள் தேர்வு மேற்பார்வையாளர் மற்றும் உயர்நிலை கல்விக் குழுக்களின் உறுப்பினர் போன்றவற்றிற்கு - சென்னை பல்கலைக்கழகத்தாலும், வேண்டி பயன்படுத்தப்பட்டது. 1925 ஆம் ஆண்டு அவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவப்படம் அக்கல்லூரியில் நிறுவப்பட - அவரது சக ஊழியர்களும், மாணவர்களும் எடுத்த முயற்சிக்கு அவர் இசைவு அளித்தாரா என்பது தெரியவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் சென்னை மாகாணத்தில் குறிப்பிடத்தக்க பகுத்தறிவு சீர்த்திருத்தவாதியாக நரசு அறியப்பட்டார். ஏற்கனவே பவுத்தத்தின் மீது அவர் கொண்டிருந்த பிடிப்பு, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு இணைந்து, பரந்த மனப்பான்மை கொண்ட சிறந்த ஆளுமையாக அவரை பரிணமிக்க வைத்தது. மனித நலனுக்குரிய எதையும் தேவையற்றதாகவோ அவரது நேரம், செயல் திறன், ஈடுபாடு ஆகியவற்றை வீணடிக்கக் கூடியதாகவோ அவரால் பார்க்க இயலவில்லை. அக்காலத்தில் உருவெடுத்த பல முற்போக்கான சீர்த்திருத்த அமைப்புகளால் மிகவும் நாடப்பட்ட ஒரு முக்கிய நபராக அவர் திகழ்ந்தார். அனைத்து வகையான சமூக ஒதுக்குதல்களையும் அவர் எதிர்த்தார்.
‘மெட்ராஸ் எக்ஸ்செல்சியார் கிளப்', இந்து சமூக சீர்த்திருத்த சங்கம், தென்னிந்திய சங்கம், தேசிய நிதியம் மற்றும் தொழிற்சங்கம், சென்னை மகாஜன சபா, யங் மென்ஸ் பிரதர்ஹுட், சென்னை சமூக மாநாடு, தென்னிந்திய ஆசிரியர் கூட்டமைப்பு, மெட்ராஸ் டீச்சர்ஸ் கில்ட், ராயபுரம் தர்ம அண்ணா சாலா, நாயுடு சங்கம், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரி, குழந்தைகள் பாதுகாப்பிற்கான சென்னை சமூக அமைப்பு, இந்திய தொழிற்சங்க மாநாடு, யங் மென்ஸ் லிட்டரரி அசோசியேசன், ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுச் சங்கம், புரசைவாக்கம் திராவிட சங்கம், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு மாநாடு மற்றும் பல்வேறு பவுத்த சங்கங்கள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
லட்சுமி நரசு இன்றுவரை நினைவுக் கூரப்படுவது - அவரது துறை சார்ந்த பங்களிப்புகளுக்காகவோ, பல்வேறு பொது நலத் தொண்டுகளுக்காகவோ அல்ல. மாறாக, அவரது காலத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களின் இருத்தல் குறித்து எழுந்த கேள்விகளுக்கான பதிலாக புத்தரின் போதனைகளை மீட்டுருவாக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சிகளுக்காகவே ஆகும். நவீன காலத்தின் தோற்றத்தால், அனைத்து வகையான சமூக மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ நடக்கும் தொடர்ந்த நியாயமற்ற வேறுபாடுகள் ஆகியவை ஒருபுறம் அங்கீகரிக்கப்பட்டு வந்த அதே வேளையில், அவற்றிற்கு எதிரான போராட்டங்களும், சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தவிர்க்க இயலாததாக ஆகி விட்டன. விரும்பியோ விரும்பாமலோ, ஆங்கிலேய ஆதிக்க அரசு, தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக துணைக் கண்டத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் மிக மோசமான பகுதிகளான பார்ப்பனிய மூடத்தனங்களுக்கு புது தெம்பு அளித்துவிட்டன. அதற்கு இணையாக, வலிமை பெற்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களும், பண்பாடு - மரபு என்ற பெயரில் அவற்றையே தங்கள் அரசியல் கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு அடித்தளமாக ஆக்கிக் கொண்டன.
புத்தரும் அவரது போதனைகளும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் சமூகங்களால், தங்களுக்கு ஓர் உலகளாவிய பார்வை அளிப்பதற்கான மூலாம்பரமாக - மனித சமத்துவம் மற்றும் சமூக விடுதலைக்கான அவர்களது தொடர்ந்த எதிர்வினைக்கான அடித்தளமாகப் பார்க்கப்பட்டது. நிலவும் பழமைவாத சிந்தனைகளோடு போட்டியிடக் கூடிய மற்றொரு பழமைவாத சிந்தனையாக, நிறுவப்பட்ட புனித நூல், மொழி மற்றும் புனித சடங்குகளைக் கொண்டதாக பவுத்தத்தை வெளிப்படுத்தும் பிற முயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இது இருந்தது. நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து, பிரச்சாரம் செய்த லட்சுமி நரசுவை, ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்குப் பிறகு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்வு, நடவடிக்கைகள் மற்றும் செய்தியால் உச்சத்தை அடைந்த ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட பவுத்தம்' என்று அழைக்கப்பட்ட சிந்தனையின் முன்னோடியாகவே காணலாம். பாபாசாகேப் அவர்களே பேராசிரியர் நரசு அவர்களை தனது முன்னோடியாகக் கருதியது தற்செயலானது அல்ல!
சாதி குறித்த நரசுவின் நூலை அறிமுகப்படுத்தி எழுதியுள்ள பிக்கு தேவப்பிரியா வலிசின்கா, நரசு இலங்கைக்குச் சென்றிருந்தபோது, வெளிப்படையாக பவுத்தத்தைத் தழுவிக் கொண்டார் எனக் குறிப்பிடுகிறார். இது குறித்து வேறு எந்த ஆதாரமும் நமக்கு இல்லை. ஆனால், நரசுவிற்கு பவுத்தத்தின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அவரது வாழ்க்கையின் தொடக்கக் காலங்களிலேயே இருந்ததை நாம் அறிய முடிகிறது. குறிப்பாக, மகாபோதி சங்கத்தின் சென்னை கிளை தொடங்கப்பட்ட ஆண்டான 1890க்கு முன்பே எனக் கூறலாம். அங்காரிகா தர்மபாலா, சென்னையில் தனது சங்கத்தின் கிளையைத் தொடங்க முடிவு செய்தபோது, ஏற்கனவே புத்தரின் அறிவுரைகளைப் பரப்புவதில் அர்ப்பணிப்போடு செயல்படக்கூடிய மூன்று முக்கியமானவர்கள் நகரில் இருந்தனர். எம். சிங்காரவேலு, பி. லட்சுமி நரசு மற்றும் அயோத்திதாசர் ஆகிய அம்மூவரும் ‘தியாசபிகல் சொசைட்டி'யின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கத்தையும் ஆதரவையும் பெற்றிருந்தனர். இவர்களைத் தவிர வேறு சில பரவலாக அறியப்படாதவர்களும் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்றைய காலத் தில் காலனிய ஆதிக்க அரசின் துணையோடு பார்ப்பனிய ஆதிக்கம் மிகுந்ததாக உருவாகிக் கொண்டிருந்த இந்து மதத்திற்கு ஒரே மாற்றாக, இவர்கள் அனைவருமே பவுத்தத்தையே கருதினர். இவர்களின் சமூகப் பின்புலம் வெவ்வேறாக இருந்ததன் காரணமாக, பவுத்தத்தின் மீதான அர்ப்பணிப்பில் ஒன்றுபட்டு நின்ற போதிலும், தங்களது இருத்தல் தேவைகளின் அடிப்படையில் பவுத்தத்தை வெவ்வேறான பார்வையிலேயே அணுகினர்.
மேற்கே எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த கம்யூனிச மாதிரிகளின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, சிங்காரவேலர் புத்தரை ஒரு நாத்திக பகுத்தறிவுவாதியாக கண்டார். லட்சுமி நரசுவை பொறுத்தவரையில், புத்தர் ஒரு மிகச் சிறந்த மாந்த நேய பகுத்தறிவுவாதி. அயோத்திதாசரை பொறுத்த வரையில், புத்தரும் அவரது அறிவுரைகளும் முக்கியமாக தமிழ் - திராவிட மரபுகளுக்குள் பொருந்தக் கூடியதாக பழமைவாத வேத மற்றும் இந்திய பண்பாடு மற்றும் வரலாற்று மரபுகளுடன் போட்டியிடக் கூடியதாக, அதனால் சமூக பண்பாட்டுப் புரட்சிக்கு முக்கிய உந்து சக்தியாக மறுகட்டமைக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதினார். தர்ம பாலாவின் மகாபோதி சங்கத்தை உருவாக்கும் பணியில் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். தங்களுக்கு இடையேயும், தர்மபாலாவுடனும் நிலவிய பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையேயும், அவர்கள் ஒரு காலகட்டம் வரையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு, நகரின் பல்வேறு பகுதிகளில் கருத்துரைகளை ஒழுங்கு செய்வதிலும், மக்களின் மொழியில் துண்டறிக்கைகள் மற்றும் ஆங்கிலத்தில் இதழ்கள் வெளியிடுவதிலும், பவுத்த விழாக்களை கொண்டாடுவதற்கு ஒழுங்கு செய்வதிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
அயோத்திதாசருக்கு பிந்தைய காலத்தில் சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்கத்துடன் நரசுக்கு இருந்த ஈடுபாடும், குறிப்பாக அதன் பெரம்பூர் கிளையை அமைப்பதிலும் அதை நிர்வகிப்பதிலும் நரசுவின் பங்களிப்பும் மகா போதி பவுத்தத்தின் இத்தகு நடவடிக்கைகளைவிட பலன் அளிக்கத்தக்கதாக இருந்தன. இச்சங்கம், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிறப்பு வாய்ந்த அயோத்திதாசரின் வழிகாட்டுதலின் கீழ், தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட் அவர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவைப் பெற்று, தலைநகரில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்களால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டது.
மகா போதி சங்கத்தில் ஒரு காலகட்டம் வரை அயோத்தி தாசருடன் இணைந்து செயல்பட்டதோடு, ராயப்பேட்டையில் இருந்த ஆசிரமத்தில் உருவாகிக் கொண்டிருந்த சாக்கிய திராவிட தென்னிந்திய பவுத்த சங்கத்தை உருவாக்குவதிலும் நரசு அயோத்திதாசருக்கு தனது ஒத்துழைப்பை நல்கினார். அயோத்திதாசர், லட்சுமி நரசு இருவருமே, உறுதியான குண இயல்புடைய, இயற்கையான அறிவுத் திறனுடன் கூடிய உணர்வுப்பூர்வமான மனதும், திட்டமிட்டு கவனமாக வளர்த்தெடுத்த கல்வியறிவும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். அனைத்திற்கும் மேலாக இருவருமே சிறந்த நோக்கமுடையவர்களாக, தற்கால நியாயமற்ற சமூகத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு, நியாயமான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய திசையில் அவற்றை திருப்பும் முயற்சியில் ஓய்வின்றி செயல்படக் கூடியவர்களாக இருந்தனர்.
ஆனால், அவர்கள் இருவரின் சமூக நிலையும் வெவ்வேறாகவே இருந்தது. நரசு, பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்திருந்த போதிலும், ஓரளவு வளமிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தார். அவரது குடும்பத்தினர் அன்றைய காலனிய அரசில் மதிப்புமிக்க பதவிகளை எட்டும் நிலையிலிருந்தனர். அதோடு நவீன ஆங்கிலம் மற்றும் அறிவியல் அறிவும் பெறக்கூடிய சூழல் அவருக்கு இருந்தமையால், அறிவாதிக்க உலகோடு தொடர்பு கொள்ளவும் நகரில் உள்ள அத்தகு மனிதர்களோடு பழகவும் அவருக்கு வாய்ப்பு இருந்தது. மற்றொரு புறத்தில் அயோத்திதாசர் நரசுவைப் போன்றே இயற்கையான அறிவுத் திறன் உடையவராகவும் தமிழ் இலக்கியப் புலமை மற்றும் மருத்துவ அறிவு உடையவராக இருந்தபோதும் அன்றைய ஆதிக்க மொழியின் வழியாக வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாதவராக இருந்தார். குறிப்பாக பறையர்கள் என்று ஒதுக்கப்பட்ட, காலனிய அரசால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வந்தவராக அவர் இருந்தார்.
வேறுபாடுகளுக்கு இடையிலும், அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர். நரசு ராயப்பேட்டை ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் உரைகள் நிகழ்த்துவார். அயோத்திதாசரின் மறைவிற்குப் பிறகு ‘சாக்கிய தென்னிந்திய பவுத்த சங்க'த்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களால் லட்சுமி நரசு, தமிழ் பவுத்த இயக்கத்தின் நண்பராக, வழிகாட்டியாக, தத்துவாசிரியராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
தமிழ் பவுத்த இயக்கத்திடம் நரசு கொண்டிருந்த ஈடுபாடும் அதில் அவரது பங்களிப்பும் பன்முகத் திறன் கொண்டவை. நாம் முன்பே குறிப்பிட்டதுபோல், சங்கத்தின் பெரம்பூர் கிளை, பெரும்பாலும் கற்றறிந்த இந்தப் பேராசிரியரின் கைத்திறனேயாகும். அமெரிக்க பவுத்த பெருமாட்டி மேரி பாஸ்டர் அவர்களின் தாராள நிதியில் ஒரு பங்கை தனது நண்பர் அங்காரிகா தர்மபாலாவின் மூலம் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுத்ததில் இவரது பங்கு அளப்பரியது.
நரசு தொடக்கத்தில் இருந்தே தன்னைச் சுற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளை உருவாக்கிக் கொண்டார். அவர்களின் துணையோடு ஒரு நிதியம் அமைத்து, வியாரம் ஒன்றும் பள்ளி ஒன்றும் கட்டினார். அப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் பயிற்றுவிக்கப்பட்டனர். தங்கள் அளவில் தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவர்களாகவும், சுதந்திர சிந்தனையுடையவர்களாகவும் அர்ப்பணிப்புடைய செயல்வீரர்களாகவும் இருந்த அவருடைய சீடர்களிடம் நடத்திய தொடர் விவாதங்கள் மற்றும் வாராந்திர உரைகள் இவற்றின் வழியாக நரசு உருவாக்கிய ‘நவீன பவுத்தம்' இங்குதான் வடிவம் பெற்றது. சங்கத்தில் அவரது சக ஊழியர்களான வி.பி.எஸ். மோனியர், பெரம்பை மாணிக்கம் ஆகியோர் பேராசிரியருடன் இணைந்து ‘இந்து மதமும் பவுத்தமும்', ‘மணிமேகலையில் பவுத்தம்' என்ற இரு தமிழ் நூல்களைப் பதிப்பித்தனர். பெரம்பூர் கிளை 1917இல் அமைக்கப்பட்டது. பாஸ்டரின் நிதியுதவியோடு எழுப்பப்பட்ட அதன் கட்டடம், 1921இல் திறக்கப்பட்டது. இங்கு சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் பல தனி நபர்களை இந்தப் புதிய மதத்திற்கு அழைத்து வந்தார். அதோடு பார்ப்பன புரோகிதர் இன்றியும் வேத சடங்குகள் இன்றியும் நடத்தப்பட்ட பல சீர்த்திருத்த திருமணங்களுக்குத் தலைமையேற்றார். இந்த திருமண முறை அக்காலகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த சுயமரியாதை திராவிடர் இயக்கத்தில் புகழ் பெறத் தொடங்கியது.
ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்திலும், அதைவிட அதிகமாக 1924 இல் அவர் ஓய்வு பெற்ற பின்னரும், தென்னிந்திய பவுத்த சங்கத்தின் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். மாகாணத்தின் பிற நகரங்களான பெங்களூர், திருப்பத்தூர், கோலார் தங்க வயல் போன்ற இடங்களுக்கு சங்கக் கிளைகள் அமைப்பதற்கும் முக்கிய விழாக்களில் கலந்து கொள்ளவும், சிறப்பு உரைகள் நிகழ்த்தவும், திருவிழா கொண்டாட்டங்களை சிறப்பிக்கவும் அவர் பயணம் மேற்கொண்டார். நகரத்தில் புதிய கிளைகள் அமைக்கவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டார். சங்கத்தின் சார்பில் ஒரு பொது மாநாடு நடத்துவது என்பது, அயோத்திதாசரின் நிறைவேறாத கனவாக இருந்தது. அத்தகைய ஒரு மாநாட்டிற்கான ஓர் அறிவிப்பை, அவர் ‘தமிழன்' இதழில் வெளியிட்டார். அதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. ஆனால், முதல் மாநாடு பண்டிதரின் மறைவுக்குப் பிறகு 1917இல் தான் நடத்தப்பட்டது. சென்னை மூர் அரங்க மக்கள் பூங்காவில் நடந்த அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்க பேராசிரியர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டன. இரண்டாவது 1920இல் பெங்களூரிலும், மூன்றாவது மீண்டும் சென்னையில் 1928லும், நான்காவது கோலார் தங்கவயலில் 1932லும் நரசுவின் காலத்திலேயே நடத்தப்பட்டது. இவை அனைத்திற்கும் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென்னிந்திய ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தினரால் பவுத்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதின் அடிப்படை நோக்கம், அவர்களது முழுமையான நிலையான, விடுதலையை நோக்கியதாக இருந்தது. அன்றைய காலனிய அரசால் சட்டமாக்கப்பட்டு வந்த பல சமூக, அரசியல் சிக்கல்களுக்கு இது தீர்வு காண முயன்றது. அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்தவை, குழந்தைகளின் கல்விக்குத் தேவையான நிதியும் சட்டத்துணையும், போதுமான அளவு அரசியல் பிரதிநிதித்துவமும் ஆகும். காலனிய அரசோடு பேசி தீர்க்க வேண்டிய இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தையை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு லட்சுமி நரசுவிடமே ஒப்படைக்கப்பட்டது. நரசு தொகுத்த புத்தரின் அறிவுரைகள் நிலைத்திருப்பதாகவும் விடுதலை அளிப்பதாகவும் காணப்பட்டன. சங்கத்தின் மதம் குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையாக அவரது ‘பவுத்தத்தின் சாரம்' ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்காலத்தில் ‘தமிழன்' இதழின் ஆசிரியராக இருந்த ஜி. அப்பாத்துøரயார் இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும்படி பணிக்கப்பட்டார்.
நவீன பவுத்தத்தின் மறு உருவாக்கத்திற்கு லட்சுமி நரசுவின் எழுத்துகளே, உண்மையான நீடித்த பங்களிப்பாக இருக்கிறது. அவரது பரந்த வாசிப்பு, ஆழ்ந்த வெளிப்பாடு மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஆண்கள் பெண்களுடன் அவர் கொண்டிருந்த நீடித்த தொடர்புகள் ஆகியவற்றின் விளைவே - பல்வேறு தளங்களில் அவர் நிகழ்த்திய பல உரைகளுக்கு அடிப்படை ஆகும். இவை திருத்தப்பட்டு நன்கு எழுதப்பட்ட கட்டுரைகளாக வடிவமைக்கப்பட்டு பல வார, மாத இதழ்களில் வெளிவந்தன. அவற்றிற்கு எழுந்த வரவேற்பின் அடிப்படையில் அக்கட்டுரைகள் மேலும் விரிவாக்கப்பட்டு, எளிய, நேரடியான, தெளிவான நூல்களாக வெளியிடப்பட்டன. நரசு மூன்று முக்கிய நூல்களை வெளியிட்டார். ‘பவுத்தத்தின் சாரம்' (1907), ‘பவுத்தம் என்றால் என்ன?' (1916), ‘சாதி குறித்த ஆய்வு' (1922), ‘பவுத்தம் சுருக்கமாக' என்ற மற்றொரு நூலைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ஆனால், இந்நூல் கிடைக்கவில்லை. நரசு பல்வேறு தலைப்புகளிலும் கட்டுரை எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பான்மையானவை இன்னமும் சேகரிக்கப்படவில்லை. எனினும் நமக்கு கிடைத்திருப்பவை ‘சதர்மா' குறித்து அவரது விளக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. அதோடு அவரது பரந்த அறிவுத்திறன், முதிர்ச்சியான சிந்தனை, எளிமையான தெளிவாக்கும் திறன் இவற்றிற்கு மேலாக அவரது சார்பற்ற நேர்மையான முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு சான்றாக அமைகின்றன.
1954இல் ரங்கூனில் நடந்த பவுத்த தோழமையின் 3 ஆம் உலக மாநாட்டில் அவரது இளைய சகாக்களான வி.பி.எஸ். மோனியர் மற்றும் ஆர்.பி. தங்கவேலனார் ஆகியோர் நரசுவின் எழுத்துகள் குறித்து கீழ்க்கண்டவாறு தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்:
‘தங்கள் மக்கள் பின்பற்றக்கூடிய பவுத்தம் குறித்த பொருத்தமான ஒரு நூலை தேடிக்கொண்டிருந்த ஜப்பானியர்களை நரசுவின் ‘பவுத்தத்தின் சாரம்' வெகுவாக ஈர்த்தது. இந்நூலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தனர். அந்நாட்டில் இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்தன. சுருக்கமாக, ஆனால் அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட பவுத்தம் குறித்த ஆய்வுகளை உள்ளடக்கிய ‘பவுத்தம் என்றால் என்ன?' எனும் சிறிய நூல், செக்கோஸ்லோவாக்கிய நாட்டின் முதல் அதிபரான ழான் மாரிக்கை பெரிதும் கவர்ந்தது. அவர் அதை தங்கள் மொழியில் மொழிபெயர்த்து, ஆசிரியருக்கு ஒரு பிரதியும் அனுப்பி வைத்தார். பின்னர் ‘இயற்கைத் தத்துவம்' பற்றிய ஓர் இதழில் இந்நூலின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பு வெளிவந்தது. அவரது மூன்றாவது நூல் ‘சாதி குறித்த ஆய்வு' அவரது சமூக, அரசியல் சிந்தனைகளைக் கொண்டதாகவும் அவர் தனது காலத்தைக் கடந்து சிந்திப்பவராக இருந்ததை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது...”
உள்நாட்டைப் பொருத்தவரையில், ‘பவுத்தத்தின் சாரம்' நூல் அம்பேத்கரை பெருமளவில் பாதித்தது. இதுவரை பவுத்தம் பற்றி வெளியான நூல்களிலேயே சிறந்தது இதுவென அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ‘சதர்மா' குறித்து அறிந்து கொள்ள விரும்பிய அனைவருக்கும் வேறுபாடின்றி அவர் இந்நூலை பரிந்துரைத்தார். 1948 இல் தனது முன்னுரையுடன் இந்நூலை அவர் மீண்டும் அச்சிட்டார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புத்தர் குறித்தும் பவுத்தம் குறித்தும் வெளிவந்த பல்வேறு எழுத்துகளிலிருந்து நரசுவின் எழுத்து தனித்துவம் பெறக் காரணம் என்ன? பொருளாதாரத்தை விவசாயமயமாக்குதல், சமூகத்தைப் பார்ப்பனியமயமாக்குதல் என்ற காலனிய முயற்சியின் பக்க துணையாக அமைந்த புத்தரின் தொடக்கால எழுத்துகளின் கீழ்திசை கண்டுபிடிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளுக்கு மாற்றாக, லட்சுமி நரசு விடுதலை தரும் பவுத்தத்தின் அடித்தளத்தை துணைக் கண்டத்தில் நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார். விழிப்புணர்வு மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கு அடித்தளமாகவும் அதன் மூலம் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் விடுதலை பெற்ற சமூக வாழ்விற்கு இட்டுச் செல்லக் கூடியதாகவுமே அவர் ‘விடுதலை தரும் பவுத்தத்தை' கட்டமைத்தார். அன்றைய காலத்தில் இருந்த பகுத்தறிவு மற்றும் மாந்த நேய சிந்தனைகளின் துணையை அவர் இதற்கு பெற்றார். ‘பவுத்தத்தின் சாரம்' நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையில் இந்த செயல்திட்டம் விளக்கப்பட்டுள்ளது.
‘தனது ஆசானின் போதனைகளை எடுத்துரைக்கும்போது, அந்த போதனைகள் எதன் மீது எழுப்பப்பட்டிருக்கிறதோ, அந்த அடிப்படைக் கருத்துகளை தவற விடாதிருப்பது சீடரை சார்ந்துள்ளது. புத்தரை பொருத்தவரையில், அவரது குரல் உண்மையை அடித்தளமாகக் கொண்டது. அதனால் உண்மை எங்கெல்லாம் இட்டுச் செல்கிறதோ, அங்கெல்லாம் சீடர்கள் செல்ல வேண்டும். ‘எதுவெல்லாம் சரியான காரணங்களோடு இல்லாதிருக்கிறதோ, எதுவெல்லாம் உண்மையோடு பொருந்தாமல் இருக்கிறதோ, அவை எதுவும் ஆசானின் அறிவுரைகளாக இருக்க இயலாது' என்பதே பவுத்தத்தை போதிக்கும் பள்ளிகள் அனைத்திலும் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிமொழியாகும். தங்கள் மதத்தை குறித்து விளக்க வந்த அனைத்து முக்கிய பவுத்த எழுத்தாளர்களும், பகுத்தறிவு மற்றும் உளவியலின் துணையை நாடியுள்ளனர். சிந்தனையின் பொதுவான நம்பகத் தன்மை குறித்து அவர்களுக்கு இருந்த அக்கறையின் காரண மாக, பொதுவாக தங்களுடைய மதத்தின் அடிப்படையாக கருதப்படும் சூத்திரங்களை, அவர்கள் பெரும்பாலும் ஒதுக்கியுள்ளனர். ஒரு பவுத்தர் என்ற நிலையிலிருந்து மாறாமல், தொடக்கக் காலத்திலிருந்து நிலவி வந்த பவுத்த மரபை பின்பற்றியே நூலாசிரியர், நவீன அறிவுத் தெளிவோடு பவுத்தத்தை தெளிவாக்க முற்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பவுத்தத்திற்கு ஒரு நவீன தன்மையை அளித்துள்ளார் என்றால், அது நவீன சிந்தனைகளோடு சிறிதளவு பவுத்தத்தை கலந்து தருவதாக அல்லாமல், அனைத்து வகையான பவுத்த மரபுகளின் அடி ஆழம் வரை சென்று, அடிப்படையான உண்மைகளை வெளிக்கொணர்வதின் மூலமேயாகும்.”
அனைத்து வகையான சீர்திருத்த எதிர்ப்புகள், மத மூடத்தனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக தாக்குப்பிடிக்கக் கூடிய ஒன்றாக பவுத்தத்திற்கு அவர் அளித்த பகுத்தறிவும் விடுதலை உணர்வும் மிக்க விளக்கமும், சமூக மூடத்தனத்தின் மிகக் கேடான வடிவமான சாதியை அதன் அத்தனை நுட்பமான, காலத்திற்கேற்ற விளக்கங்களோடு, நரசு தனது எழுத்துகளில் விவரித்த தன்மையும், நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்குதலில் பெரும் பங்காற்றியது. இந்தியாவிற்குள், அவ்வாறு இன்னமும் அங்கீகரிக்கப்படாத போதிலும், அம்பேத்கரிய பவுத்தத்தின் முன்னோடியாகவே நரசு நிற்கிறார். அம்பேத்கரின் எழுத்துகளுடன் இணைந்து நோக்கும்போது, துணைக் கண்டத்தில் ஒரு மனிதநேய சமூகத்தை அமைப்பதில் ஒரு சாத்தியமான விரும்பத்தக்க கொள்கை நெறியாளராகவே நரசு திகழ்கிறார்.


10.Dr.பெருமாள்
(17/06/1933
-10/07/2001)































































11.சுவாமி சகஜாநந்தா
(1890- 1959)

                 தமிழ்நாட்டில் ஆரணிக்கு அருகில் உள்ள மேல் புதுப்பாக்கம் என்ற கிராமத்தில் அண்ணாமலை - அலமேலு தம்பதியினருக்கு 1890ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் நாள் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தா. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி என்பதாகும். அவர் தனது கிராமத்தில் இருந்த அமெரிக்கன் ஆற்காட் புராட்டஸ்டன்ட் மிஷன் பாடசாலையில் தொடக்கக் கல்வியை பயின்றார். அதன் பிறகு உயர்நிலைக் கல்விக்காக திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகாமணி என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்களை கிறித்தவ மதத்துக்கு மாற்ற அங்கிருந்த பாதிரிமார்கள் முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பினார். இதுபற்றி அவர் பேசியுள்ளதை இங்கே சுட்டிக்காட்டுதல் பொருத்தமாயிருக்கும்: ’மிஷனரிகள் நன்றாக வேலை செய்திருக்கிறார்களென்றாலும் அவர்கள் செய்கிறதில் என்ன பிசகு இருக்கிறது என்றால் என்னுடைய கிராமத்திலிருந்து நானும் இன்னொரு பையனும் எலிமெண்டரி ஸ்கூல் படிப்புப் படித்துவிட்டு திண்டிவனம் மிஷனரி போர்டிங் ஹைஸ்கூலில் படித்தோம் எங்களை கிறிஸ்துவர்களாகச் சொன்னார்கள். நான் கிறிஸ்துவனாகச் சேரமாட்டேன் என்று சொன்னேன். அப்படியானல் சாப்பாட்டிற்குப் பணம் கொடு என்று சொன்னார்கள். அதன்பேரில் நான் சாப்பிட்டதற்கு பணம் வசூலித்துவிடார்கள். அதனால் நான் பணம் செலவு செய்ய வேண்டியதாகி விட்டது.’
                 பிழைப்பு தேடி அவரது பெற்றோர்கள் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களோடு அவரும் அங்கே சென்றார். அங்கு ஏற்பட்ட தொடர்புகளின் காரணமாக அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டது. தனது 17வது வயதில் தான் ஒரு சன்னியாசி ஆகப்போவதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு, அவர்களை விட்டு வெளியேறினார். பல்வேறு ஊர்களிலும் அலைந்து திரிந்து பல ஆன்மீகவாதிகளைச் சந்தித்து அவர்களிடம் மத சம்பந்தமான கல்வியைப் பெற்றார். யோகி நீலமேக சுவாமிகள், தட்சணா சுவாமிகள், கைலாச சுவாமிகள் முதலானோர் அதில் முக்கியமானவர்கள். சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சுவாமிகளை அவர் சந்தித்தது தான் அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எனவும், அவர்தான் சகஜாநந்தாவை சிதம்பரத்துக்குச் சென்று அங்கே நந்தனின் வாரிசுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தினார் எனவும், அதுமட்டுமின்றி அவரது பெயரை சகஜாநந்தா என்று மாற்றியவரும் கரபாத்திர சுவாமிகள் தான் என்றும் கூறப்படுவதுண்டு.ஆனால்,தன்னை சிதம்பரத்துக்கு அழைத்துவந்து அங்கேயே தங்கியிருந்து சேவை செய்யுமாறு தன்னிடம் கூறியவர் அ.முருகேசம் பிள்ளை என்பவரே என சகஜாநந்தா குறிப்பிடுகிறார்.’ திரு.அ. முருகேசம் பிள்ளை அவர்கள் 1910 ஆம் வருடம் ஜூலை மாதம் சிதம்பரம் தரிசனத்திற்கு தம்மோடு அடியேனையும் அழைத்துக்கொண்டு சென்று சிதம்பரத்தில் எம் குல மணியாகிய திருநாளைப்போவார் தீயில் மூழ்கிய ஓமக்குளத்தின் கரையில் ஸ்ரீ ஆறுமுக சுவாமியவர்களும் பின்னத்தூர் ஸ்ரீமத் இலட்சுமணன் அவர்களும் கட்டியுள்ள சிறு கட்டிடமாகிய சத்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய்க் காண்பித்து ஈண்டிருந்து ஏழைப் பஞ்சமர்கட்கு நன்மை செய்வது நலமெனத் தெரிவித்தார்கள்’ என அதை சகஜாநந்தா விவரித்திருக்கிறார். சிதம்பரத்துக்கு வந்த சுவாமி சகஜாநந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பினார்.அங்கிருந்த ஆன்மீகவாதிகளையும், வள்ளலாரின் வழியை ஏற்றுக்கொண்டிருந்த சில சன்னியாசிகளையும் அணுகித் தனது விருப்பத்தை தெரிவித்தார். தில்லை நடராசனை தரிசிப்பதற்காக வந்து சிதம்பரத்தில் அக்னியில் இறங்கி வேதியராகி சிவனோடு ஐக்கியமான நந்தனின் கதையை பெரிய புராணம் விளக்குகிறது. அந்தக் கதை அதன் பிறகு பல வடிவங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு கிராமப்பகுதிகளில் எல்லாம் பிரபலமாகி இருந்தது. கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திர கீர்த்தனை என்று அதை இசையோடுகூடிய பாடலாக எழுதி மேலும் பிரபலப்படுத்தி இருந்தார். அந்தத் தாக்கத்தினால் நந்தனைத் தனது முன்னோடியாக எடுத்துக்கொண்ட சகஜாநந்தா, நந்தனின் பெயரில் மடம் ஒன்றையும், கல்விச்சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவெடுத்து 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி நந்தனார் கல்விக்கழகம் என்பதை நிறுவினார். இதனிடையே அவருக்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் சைவ சமய பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பயணம் அவருக்கு உலகமெங்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவர் உருவாக்க நினைத்த மடத்துக்கும், கல்விச்சாலைக்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது. சுவாமி சகஜாநந்தா துவக்கிய நந்தனார் கல்விச்சாலையில் முதலில் 25 மாணவர்கள்தான் சேர்ந்திருந்தார்கள். அது ஒரு கூரைக் கொட்டகையில் நடந்து வந்தது. அதன் பிறகு 1918ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அப்போது சென்னை மாகாண உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மடத்தையும், பள்ளியையும் நடத்துவதற்கு அரசாங்கத்தின் உதவியை சுவாமி சகஜாநந்தா நாடினார். பள்ளிக்காக நிலம் வேண்டுமெனக் கேட்டு விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் சிதம்பரத்திலிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. சாதியுணர்வு கொண்ட அந்த அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். இதுபற்றி எம்.சி.ராஜா ’ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற தனது நூலில் எழுதியிருக்கிறார்: ’ சுவாமி சகஜாநந்தம் என்னும் ஆதிதிராவிட சன்னியாசி,மிகவும் சிறந்த பண்புகள் கொண்ட சாது. அவர் தான் நடத்திவருகின்ற நந்தனார் இலவசப் பள்ளிக்காக ஒரு துண்டு தரிசு நிலம் வேண்டுமெனக்கேட்டு விண்ணப்பித்தார்.அவரது விண்ணப்பம் வருவாய்த்துறையில் பணியாற்றிவந்த கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. சாதிவெறிபிடித்த அவர்களோ நிலம் தருவதற்குப் பரிந்துரைக்கவில்லை.ஆனால் சகஜாநந்தம் அத்துடன் விட்டுவிடவில்லை.மாவட்ட ஆட்சியரிடம் சென்றார்’. எனக்குறிப்பிட்டுள்ள எம்.சி.ராஜா, ஐ சி எஸ் அதிகாரியான அந்த பிரிட்டிஷ்காரர் நேரடியாக அந்த இடத்தைப்பார்வையிட்டு சுவாமி சகஜாநந்தம் அவர்களுக்கு நிலம் வழங்க உத்தரவிட்டார் எனத் தனது நூலில் பதிவு செய்திருப்பதோடு அந்த கலெக்டர் போட்ட உத்தரவையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்..’ அதன்பிறகு ராஜகோபால ஆச்சாரியார் அந்தப் பள்ளிக்காக 52 ஏக்கர் நஞ்சை நிலத்தை அளித்தார் எனத் தெரியவருகிறது. 1926 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் காந்தியடிகள் நந்தனார் பள்ளிக்கு வந்து பார்வையிட்டது அந்தப் பள்ளியை காங்கிரஸ்காரர்களிடையே பிரபலப்படுத்தியது. அந்தப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண்களுக்குக் கல்வி தருவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. சுவாமி சகஜாநந்தா அவர்கள் 1926ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1932ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியை வகித்தார். அதன்பிறகு 1936 முதல் 1947 வரை மீண்டும் அவர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947ல் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அது 1959ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி அவர் காலமாகும்வரை தொடர்ந்தது. சுவாமி சகஜாநந்தா அவர்களால் உருவாக்கப்பட்ட நந்தனார் பள்ளி இன்று தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்றென இரண்டு மேல்நிலைப்பள்ளிகளாக அது வளர்ந்துள்ளது. அந்தப் பள்ளிகளில் உள்ள விடுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் இப்போதும் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கி இருக்கிற கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்வி பயில்வதற்கு இந்தப் பள்ளிகளே இப்போதும் உதவியாக உள்ளன. தான் மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக இருந்தபோது சுவாமி சகஜானந்தா அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கிறார். கல்வியே செல்வம் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த சுவாமி சகஜாநந்தா அந்தக் கல்வியின் பலன் தாழ்த்தப்பட்ட மக்களை சென்று சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் மேலவையிலும், பேரவையிலும் பேசியவற்றில் அதிகமாக கல்வியைப் பற்றியே வலியுறுத்தி வந்திருக்கிறார். சுவாமி சகஜாநந்தா அவர்கள் ஒரு ஆன்மீக வாதி மட்டுமல்லாமல் தமிழில் சிறந்த புலமை கொண்டு இருந்தவரும்கூட. சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் சீனுவாசாச்சாரியிடம் அவர் சமஸ்கிருதத்தை பயின்றதாகத் தெரிகிறது. வ.உ.சி. எழுதிய நூல்களுக்கு சுவாமி சகஜாநந்தா சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையையும், அதற்கு இருந்த அங்கீகாரத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வ.உ.சி. மறைந்தபோது அவரது குடும்பத்துக்காக சுவாமி சகஜாநந்தா அவர்களே முன்னின்று நிதி திரட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆன்மீகவாதியாக இருந்தாலும் அரசியலிலும், சுவாமி சகஜாநந்தாவுக்கு தெளிவான பார்வை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப் பெற்ற இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும், காந்தியடிகளின் பிடிவாதத்தால் பூனா ஒப்பந்தத்தின் மூலமாக பறிக்கப்பட்டபோது அம்பேத்கருக்கு ஆதரவாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்திப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் சுவாமி சகஜாநந்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா நிலைகளிலும் தமக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்று விடாமல் வலியுறுத்தியவர் அவர். கோயில்களில், தேவஸ்தான கமிட்டிகளில் ஆதிதிராவிடர்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். திருப்பதி தேவஸ்தானத்தில் அப்படி ஒருவரையாவது நியமியுங்கள் என்று வலியுறுத்தினார். அப்போது இருந்த ஜில்லா போர்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தென்னாற்காடு மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நான்கில் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ஜில்லா போர்டில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் தொகை கணக்குப்படி தாழ்த்தப்பட்டவர்கள் குறைந்த பட்சம் பத்து பேராவது ஜில்லா போர்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒருவர் தான் இருக்கிறார். இது நியாயம் அல்ல. எல்லா இடங்களிலும் நான்கில் ஒரு பங்கைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று சுவாமி சகஜாநந்தா வலியுறுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் 1930ஆம் ஆண்டில் அங்கிருந்த கள்ளர் வகுப்பினர் ஒரு மாநாடு கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பல்வேறு கட்டளைகளைப் போட்டார்கள். அதனால் அந்தப் பகுதி எங்கும் பதட்டம் உண்டானது. அந்தப் பிரச்சனை குறித்து சட்ட மேலவையின் கவனத்தை ஈர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு ஆதரவாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை சகஜாநந்தா வலியுறுத்தினார். அன்றைக்கு இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தபோது சென்னை மாகாண அரசு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பள்ளிகள் பலவற்றை மூடியது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் வேண்டுமானால், மற்ற சாதி இந்துக்கள் படிக்கின்ற பள்ளிகளில் சேர்ந்து படிக்கட்டும் என்று அரசு கூறியது. அதை எதிர்த்த சுவாமி சகஜாநந்தா தாழ்த்தப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகளில் வேண்டுமானால் பிற வகுப்பு மாணவர்களைக் கொண்டு வந்து சேருங்கள். இந்தப் பள்ளிகளை மூடாதீர்கள் என்று வாதிட்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்ற சாதியினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்குச் சென்று படிக்க முடியாத சூழல் உள்ளது என்பதை அரசாங்கத்திடம் எடுத்துச் சொன்னார். பம்பாய் மாகாணத்தில் இருப்பதுபோல தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனி போர்டு சென்னை மாகாணத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வட்டமேஜை மாநாட்டில் சென்னை மாகாணத்தின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 40 இடங்கள் தரவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. சென்னை வாக்குரிமை கமிட்டியார் அதை 25 இடங்களாக குறைத்தார்கள். காபினட் கூட்டத்திலோ அதை 18 என்று இன்னும் குறைத்து விட்டனர். இது அநீதி மக்கள் தொகைப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களைக் குறைக்காமல், கொடுக்க வேண்டும் என்று சுவாமி சகஜாநந்தா சட்ட மேலவையில் குரல் எழுப்பினார். அன்றைய காலத்தில் பஞ்சாயத்து கோர்ட்டுகள் இருந்தன. நீதி நிர்வாகம் அங்கேயே செய்யப்பட்டது. மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் பஞ்சாயத்து கோர்ட்டுகளை உருவாக்கியதாக சொன்னது. ஆனால் அப்படி உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட்டுகள் ஏழை மக்களுக்குக் கேடாக முடிந்து விட்டது என்று சுவாமி சகஜாநந்தா எடுத்துக்கூறினார். பஞ்சாயத்து கோர்ட்டுகள் அமைக்கப்படுவதற்கு முன்பு வசதி உள்ளவர்கள் வழக்குப் போட வேண்டுமென்றால் தொலைதூரம் போகவேண்டும் என்று அஞ்சி எளிதில் வழக்கு தொடுக்க முன்வருவதில்லை. ஆனால் பஞ்சாயத்துக் கோர்ட்டுகள் அமைத்த பிறகு தன்னிடம் கூலி வேலை செய்பவன் இரண்டு மூன்று நாள் வேலைக்கு வரவில்லை என்றால் கூட உடனே கோர்ட்டில் புகார் கொடுத்து ஏழை மக்களை நீதிமன்றத்திற்கு இழுக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே இது மக்களுக்கு நன்மை தரவில்லை என்பதை சுவாமி சகஜாநந்தா எடுத்துக்கூறினார். இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகள் மட்டுமல்லாது வன்கொடுமைகள் குறித்தும் அவர் பல்வேறு பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். சிதம்பரத்தை அடுத்த நஞ்சைமகத்துவாழ்க்கை என்ற கிராமத்தில் மாசி மகத்திருவிழாவை கொண்டாடுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அந்த ஊரைச்சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை அவர் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். ‘‘இக்காலத்தில் எங்களை அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுப்பாதையில் நடக்கக்கூடாதென ஜாதி இந்துக்கள் தடுப்பார்களானால் நாங்கள் எப்படி பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியும்? வட்ட மேஜை மாநாட்டில் மகாத்மா போன்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களே அவர்களை வேறு பிரிக்கக் கூடாதெனச் சொல்லியது அனுபவ சாத்தியமாகுமா?’’ என்று கேள்வி எழுப்பினார். மின்சார உற்பத்தி அரசாங்கத்தின் பொறுப்பில் தான் இருக்க வேண்டும். தனியாரிடம் அதை கொடுக்கக்கூடாது என்று சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வாதிட்டது இப்போதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ‘‘சர்க்காரே இந்த மின்சார சக்தியை நேரே தங்களிடம் வைத்து ஏழைகளுக்குச் சப்ளை செய்தால் ஏழைகளுக்குக் குறைந்த சார்ஜில் கொடுக்கலாம். சர்க்காருக்கும் லாபம் உண்டாகும். இப்பொழுது அந்நிய கம்பெனிகளுக்குக் கொடுத்துவிட்டதினால் ஏராளமான பணத்தை இடையிலுள்ள கம்பெனிக்காரர்கள் லாபமாக அடித்துக்கொண்டு போகிறார்கள்’’ என்று அவர் பேசியது இன்று பேசியது போல் இருக்கிறது. தமிழகம் இந்தி எதிர்ப்புக்கு பெயர் போனது. ஆனால் சுவாமி சகஜானந்தா இந்தி அவசியம் என்று பேசி உள்ளார். ‘‘எங்கள் பிள்ளைகளைப் பொறுத்த வரையில் எத்தனை பாஷையானாலும் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இப்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு சமஸ்கிருதப் புஸ்தகம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறேன். எங்கள் ஜாதி முன்னேற்றமடைய வேண்டுமானால் எத்தனை பாஷை வேண்டுமானாலும் கற்றால்தான் முன்னேற்றமடைய முடியும். படிப்பில் ஹிந்தியை கட்டாயம் என்று வைத்திருக்கிறதை உத்தியோகத்திற்கும் கட்டாயம் என்று வைக்க வேண்டுமென்று யோசனை கூறுகிறேன். ஆனால் நான் வற்புறுத்தவில்லை. ஹரிஜனங்களில் ஒவ்வொரு பிள்ளைகளும் ஹிந்தி முதலான பல பாஷைகளைப் படித்தால்தான் முன்னுக்கு வரமுடியும்’’ என்பது அவரது வாதம். விவசாயிகள் பிரச்சனையை அணுகியதிலும் சுவாமி சகஜானந்தா வித்தியாசமான நிலையையே எடுத்திருக்கிறார். உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களைப் பற்றிப் பேசும்போதும் நிலமில்லாதவர்களாயிருந்த ஏழைகள்மீதே அவரது கவனம் சென்றிருக்கிறது. விவசாயிகளை ஏவுதல் விவசாயி, ஏற்றுதல் விவசாயி என அவர் இரண்டாகப் பிரிக்கிறார். உழுது பயிரிடும் வேலையைச் செய்பவர்களை ஏற்றுதல் விவசாயி என அவர் குறிப்பிடுகிறார். நிலவரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் நிலவுடமையாளர்களான ஏவுதல் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஏற்றுதல் விவசாயிகளை கவனத்தில் கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சாட்டுகிறார். ‘‘ஏர் உழுகிறவர்கள் விஷயத்தில் அனுதாபங் காட்டவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியிருக்கும் நிலைமையில் சிலர் என்ன செய்கிறார்கள். பாலுக்குச் சக்கரை வேண்டுமென்று அழுகிறார்கள். கூழுக்கு உப்பில்லை என்று சொல்லவில்லை. நிலவரியைக் குறைக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். நாட்டில் உழுகிறவனுக்குக் கஞ்சி கிடைக்கிறதா, துணி கிடைக்கிறதா, சுகாதாரம் கிடைக்கிறதா, மருந்து கிடைக்கிறதா என்று பார்க்கிறதில்லை. வாஸ்தவத்தில் நாட்டில் ஏழை விவசாயிகள் எப்படி இருக்கிறார்கள். நெருப்பில் விழுந்த புழுக்கள்போல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முதலாளியும் அவர்களைத் தங்களுடைய நிலங்களில் பயிர் செய்யும்படி செய்கிறார்கள். அறுப்புக்காலத்தில் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதியத்தை கொடுப்பதில்லை. ஆடி மாதம் வரையில் கொடுக்காமல் இழுத்துக்கொண்டுபோய் ஆடி மாதத்தில் கணக்குப் பார்க்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் புதிய குறுவை நெல்லைக் கொடுக்கப் பார்க்கிறார்கள்’’ என்று அவர் பேசியிருப்பது அரசியல் கட்சிகளெல்லாம் விவசாய தொழிலாளர்களைத் தொடர்ந்து புறக்கணிக்கும் இன்றைய நிலையிலும் பொருத்தமானதாக இருக்கிறது. கோயில்களை அனைவருக்கும் திறந்து விடுவதாக அரசாங்கம் செய்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை என்பதை அவர் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகிறார். ‘‘ஆலயப் பிரவேச சட்டம் பெரிய ஆலயங்களில் அமுலுக்கு வந்துள்ளது. சிறிய கோயில்கள் மூடியே கிடக்கிறது. சீர்காழி தாலுகாவில் திருநகரி, திருவாலி முதலான இடங்களில் திறந்த ஒரு நாள் தவிர மறுநாள் முதல் ஹரிஜனங்களை வரவேண்டாமென்று தடுத்துவிட்டார்கள். சட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால் கனம் ஸ்பீக்கர் அவர்கள் தான் பல கோவில்களைத் திறந்து விட்டிருக்கிறார். அவைகளிலும் இப்பொது ஹரிஜனங்களை அனுமதிக்கவில்லை. திறந்துவிட்ட திருநகரி, திருவாலி கோவில்களில் இவ்வாண்டு தை அமாவாசையில் நடக்க வேண்டிய 12 கருடசேவையை நிறுத்தி விட்டார்கள். சட்டத்தை இயற்றியும் பலனை அனுபவிக்க முடியாமலிருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.திருவிதாங்கூர் கோயில் நுழைவுபற்றி அம்பேத்கர் சொன்னதும் சகஜாநந்தா சொல்வதும் ஒன்றுபோலவே இருக்கிறது.’ கோயில் நுழைவு மட்டும் போதுமா? அதற்குமேல் எதுவும் வேண்டாமா? என்று கேட்ட அம்பேத்கர் தேவஸ்தானத்துறை தீண்டாத மக்கள் கையில் ஒப்படைக்கப்படுமா? எனவும் கேள்வி எழுப்பினார். இன்று அலோபதி மருத்துவமுறை எல்லா இடங்களிலும் கோலோச்சி வருகிறது. அதில் எவ்வளவோ வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், இப்போதும் கூட பல நோய்களுக்கு அதில் சரியான மருந்து கிடையாது. அதுமட்டுமல்லாமல் அலோபதி மருத்துவ முறையில் பக்க விளைவுகள் அதிகம். இதை உணர்ந்து இந்திய மருத்துவத்தை, தமிழ் மருத்துவத்தை இங்கே அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என சுவாமி சகஜானந்தா வலியுறுத்தி இருக்கிறார். ‘‘டாக்டர்கள் வெளிநாட்டு மருந்துகளுக்கு ஏஜென்டுகளாகத்தான் இருக்கின்றார்கள். என்னென்ன மருந்துகள் எந்தந்த வியாதிக்குக் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் மருந்துகளை வாங்கிக் கொடுக்கச்சொல்லி விடுகிறார்கள். ஆகையால் வெளிநாடுகளிலிருந்து தமிழ் முறையிலுள்ள மருந்துகளை அவர்கள் தெரிந்துகொண்டு அவைகளைக் கொடுத்து சிறந்த தமிழ் முறையில் அவர்கள் வைத்யம் செய்யவேண்டும். இப்பொழுது இந்திய வைத்திய முறையில் அநேகம் பேர்கள் பயிற்சியடைந்து அவர்கள் சிகிச்சை செய்து அதனால் அநேகம் பேர்கள் கூட குணமடைந்திருக்கிறார்கள். அதே மாதிரி ஒவ்வொரு ஜில்லாவிலும் இந்திய வைத்திய கல்லூரியை ஏற்படுத்திப் பிள்ளைகளுக்குப் பயிற்சியளித்து தமிழ் முறையில் சிகிச்சை செய்யும்படியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இப்பொழுது ஒரு அணா£ ஒன்றரை அணாவில் சிகிச்சை செய்யும்படியான இந்திய மருந்துகளிலிருக்கின்றன. அவ்விதம் இருக்கும்பொழுது இன்ஜெக்ஷன் பண்ணுவதற்கு ரூ.3, 4 என்று கொடுத்து வெளிநாட்டு மருந்துகளை வாங்கி வருகின்றார்கள். ஆகவே குறைந்த சிலவில் நல்ல சிகிச்சையடையும்படியாக இந்திய வைத்திய கல்லூரியை அமைத்து பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுத்து இந்திய முறையில் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அவர் வலியுறுத்தியது இன்றும் பொருந்தக்கூடியவையே ஆகும். இந்தியாவிலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்ஜெட்டில் அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்கிற ‘சிறப்பு உட்கூறுத் திட்டம்‘ பற்றி இப்போதுதான் நாம் பேசுகிறோம்.ஆனால் அதை சுவாமி சகஜாநந்தா அறுபது ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளார்.’ நம் மாகாணத்தில் ஹரிஜனங்கள் ஐந்தில் ஒரு பங்கு இருக்கிறார்கள். ஆகையால் மாகாண வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஏழைகளுக்கு செய்ய வேண்டியது அவசியம். 55 கோடி வருமானம் வந்தால் 11 கோடி ஒதுக்க வேண்டும். இதில் லேபர் டிபார்ட்மெண்டுக்கு ஒரு கோடி ஒதுக்கிவிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஏழைகளுக்கு நிலங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படி 30 வருஷம் செய்தால் ஏழைகள் நில சுவாந்தார்களாவார்கள்’என்று அவர் வற்புறுத்தியிருப்பது இதற்கொரு சான்றாகும். அயோத்திதாசப் பண்டிதர் தமிழ் பௌத்தத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்சிக்கான பாதையாக முன்வைத்தார்.ரெட்டமலை சீனிவாசன்,எம்.சி.ராஜா போன்ற தலைவர்களோ அரசியல் அதிகாரம் பெறுவதன்மூலமே இந்த மக்கள் விடிவுபெற முடியும் என்றனர்.சுவாமி சகஜாநந்தா ஆன்மீகமும்,கல்வியும்தான் இந்த மக்களை ஈடேற்றும் என நம்பினார்.இந்தத் தலைவர்களின் பாதைகள் வேறாக இருந்தாலும் அவர்களது நோக்கமெல்லாம் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் இந்த மக்கள் விடுதலைபெற வேண்டும் என்பதாகவே இருந்தது.இன்றும்கூட அவர்களது சிந்தனைகள் நமக்குக் கைவிளக்காக இருக்கின்றன. சுவாமி சகஜாநந்தா பல்வேறு நூல்களை எழுதியதாகவும், பரஞ்சோதி என்ற பத்திரிகையை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.ஆனால் அவை இப்போது கிடைக்கவில்லை.நம்மிடையே அண்மைக்காலம்வரை வாழ்ந்த அவரது பதிவுகளைத் தேடியெடுப்பதுவும்கூட கடினமான பணியாகவே இருக்கிறது.நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரவையில் ஆற்றிய முதல் உரையில் சுவாமி சகஜாநந்தாவை நினைவுகூர்ந்தேன்.அவர் உருவாக்கிய நந்தனார் பள்ளியைத் தமிழ்நாட்டிலேயே தலை சிறந்த பள்ளிகளில் ஒன்றாக மாற்றவேண்டுமென்பதற்காகத் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன். ப்ளஸ் டூ தேர்வில் 2006 ஆம் ஆண்டில் வெறும் ஏழரை சதவீதமாக இருந்த தேர்ச்சி, 2008 ஆம் ஆண்டில் எழுபது சதவீதமாக உயர்ந்ததற்கு நான் எடுத்த நடவடிக்கைகளும் ஒரு காரணமாகும்.இப்போது கல்வியில் ஆர்வம்கொண்ட நண்பர்கள் துணையோடு அந்தப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கும்கூட நாடகம் முதலான பிற துறைகளிலும் வல்லுனர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.பள்ளியின் சூழல் வெகுவாக இப்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோதுதான் சுவாமி சகஜாநந்தாவின் உரைகளைத் தொகுக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.தமிழக சட்டப் பேரவை நூலகம் போதுமான பணியாளர்கள் இல்லாததால் சரியான பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது.அங்கு எந்தவொரு நூலையும் எளிதில் தேடிக் கண்டுபிடித்துவிட முடியாது.பேரவை உரைகளும் ஆண்டுவாரியாக அடுக்கிவைக்கப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியாகப் படித்துப் பார்த்துதான் அதில் உள்ளவற்றைத் தெரிந்துகொள்ளமுடியும்.படிக்கும்போது தூசு நாசியை அடைக்கும்.ஒரு பக்கத்தை படித்து முடிப்பதற்குள் பத்து தும்மலாவது போடவேண்டியிருக்கும். அந்தச் சூழலில் தொகுக்கப்பட்டவைதான் இந்த நூலில் உள்ள உரைகள்.இன்னும் தொகுக்கப்படாதவை ஏராளமாய் இருக்கக்கூடும்.அவற்றையும் கண்டெடுத்து நூலாக்கவேண்டும். கிடைத்தவரைக்கும் முதலில் நூலாக்கிவிடுவோம் என்ற எண்ணத்தில்தான் இந்நூல் உருவாக்கப்பட்டு உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக சுவாமி சகஜாநந்தா ஆற்றியுள்ள அரும்பணிகள் நம்மையும் அந்தத் திசை நோக்கிச் செலுத்துமென்று நம்புகிறேன். சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன் அவர் செய்த பணிகளை நாம் தொடரவேண்டும்.அப்படிச் செய்யாவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.


12.ஜே.சிவ
சண்முகம் பிள்ளை
(24.02.1901-17.02.1975)

An unsung hero of TN legislature J. Sivashanmugam Pillai The recent move of the All India Anna Dravida Munnetra Kazhagam to nominate one of its senior Dalit members P. Dhanapal for the post of Assembly Speaker has turned the spotlight on one of the unsung heroes of the State’s legislature – its first Dalit Speaker, J. Sivashanmugam Pillai (1901-1975). There is also much curiosity over the Speaker’s use of a surname that is traditionally not associated with the Dalit community. On this, C.K. Tamizharasan, four-time legislator of the Assembly and Republican Party of India (RPI) leader, clarifies that in those times when Pillai lived, there was indeed a practice among Dalits to keep such a surname. There were some other Dalits too in public life having a similar surname, he said. Pillai, an ardent follower of Mahatma Gandhi, plunged into political life after getting a postgraduate degree in arts from Madras University. A resident of Nungambakkam here, he studied at Loyola College and the Presidency College. At the age of 31, he became a member of the Corporation of Chennai. Five years later, he went on to occupy the coveted post of Mayor of the Corporation. On November 9, 1937, on a motion moved by the Congress party’s stalwart S. Satyamurti, he was unanimously elected Mayor, thus becoming the first Dalit Mayor of the Corporation. On hearing Pillai’s election, Gandhiji, who was then in Kolkata, sent him a message: “My warmest congratulations on your election to Mayoralty, which, I have no doubt, you will adorn with distinction.” Convinced that problems and issues concerning Dalits should be presented to the British authorities in a constitutional manner, he articulated them ably before several panels including the Simon Commission and Lothian Committee. When a committee was constituted in 1944 under the chairmanship of Tej Bahadur Sapru to moot Constitutional proposals, Pillai represented Dalits and presented a strong case for securing economic independence to “Depressed Classes” (which was the phrase widely used then to mean Dalits or Scheduled Castes). Pillai believed that unless and until this was done, the method of election made no difference to them. At that time, the discussion was on whether to have exclusive electorate for Dalits or common electorate with reservation of seats. In his note to the Sapru Committee, he had mentioned that in the erstwhile Madras Presidency, there was enough of legal protection for his community with regard to public places and public wells but in practice, it was of “very little use.” What was required, Pillai contended, was not legal enactment but “change of heart” among caste Hindus. It was no surprise that Pillai, given his deep knowledge and scholarship, was chosen Speaker of the State legislature after the 1946 elections. Pillai’s record of nine years as Assembly Speaker (from 1946 to 1955) still remains unbroken. As the Speaker, he had built up high traditions and was known for utmost impartiality. As Congress leader Kamaraj had once said, “though a Congressman, he held the scales even.” At a public reception given to him in 1955, Rajaji hailed Pillai for having discharged the onerous duties “justly and with humility.” C. Subramaniam, who was then State Minister and Leader of the House, speaking on a motion of thanks in the Assembly, observed that Pillai becoming Chennai Mayor and Assembly Speaker was “a symbol of the aspirations of the community to which he belonged, and of their hope for the future.” In August 1955, Pillai resigned the post of Speaker to become Member of the Union Public Services Commission (UPSC). After serving the UPSC till 1961, Pillai was Member of Parliament (Rajya Sabha) from 1962 to 1968. On New Year’s Day in 1975, he died at his house in Chennai after a brief illness.


13.ஏ.பி.வள்ளி
நாயாகம்.
(19/08/1953-
19/05/2007)


ஆ. பு. வள்ளிநாயகம் ஆறுமுகம் புஷ்பம்மாள் வள்ளிநாயகம் (1953 ஆகத்து 19 – 2007 மே 19) என்னும் ஏ. பி. வள்ளிநாயகம் விளிம்புநிலை வரலாற்று வரைவாளர்; சமநீதி எழுத்தாளர்; இதழாளர்; அரசியல் ஆசிரியர்; சமூகச் சீர்திருத்தக்காரர். இவர் 1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது முதல் தனது இறுதிநாள் வரை அரசியற் செயற்பாட்டாளாராகப் பணியாற்றினார். ஆதிக்க எதிர்ப்பு, சாதி மறுப்பு, பொதுவுடைமை ஏற்பு ஆகியன அவருடைய அரசியற் கொள்கைகளாக இருந்தன.
பிறப்பு
ஆ. பு. வள்ளிநாயகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி என்னும் ஊரில் ஆறுமுகம் – புஷ்பம்மாள் இணையருக்கு தலைமகனாக 1953 ஆகத்து 19 ஆம் நாள் பிறந்தார்.
கல்வி
வள்ளிநாயகம் தந்தை ஆறுமுகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வித் துறையில் பணியாற்றினார். அதனால் வள்ளிநாயகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தொடக்க, இடைநிலை கல்வியையும் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் கல்லூரிக் கல்வியையும் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
வள்ளிநாயகம் பள்ளி மாணவராக இருந்தபொழுதே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். திராவிடர் கழகம் தொடங்கி தமிழ்நாடு மாற்றுப் பத்திரிக்கையாளர் எழுத்தாளர் பேரவை வரை பல்வேறு சமூக – அரசியல் அமைப்புகளோடு தொடர்புகொண்டிருந்தார்.
இந்தி எதிர்ப்புப் போர்
வள்ளிநாயகம் பள்ளியில் படிக்கும்பொழுது, தன்னுடைய பன்னிரண்டாவது வயதில், 1965ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் பொதுவாழ்க்கைக்கான் உந்து உணர்ச்சியைப் பெற்றார்.
திராவிடர் கழகத்தில்
வள்ளிநாயகம் 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பெரியார் ஈ. வே. இராவின் தலைமையை ஏற்று திராவிடர் கழகத்தில் இணைந்து செயற்படத் தொடங்கினார். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றபொழுது அக்கல்லூரியின் திராவிடர் மாணவர் கழகத் தலைவராகவும் தஞ்சை மாவட்ட திராவிடர் மாணவர் – இளைஞர் அணிச் செயலாளராகவும் தஞ்சை மண்டல திராவிடர் மாணவர் – இளைஞர் அணிச் செயலாளராகவும் பணியாற்றினார். அப்பொழுது திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த கி. வீரமணியோடு இணைந்து தமிழகம் முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டார். 1980ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் வீச்சோடு இயங்கிய ஈழ ஆதரவுப் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழீழப் போராட்ட அமைப்புகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (Elem People Revolutionary Liberation Front - EPRLF) ஆதரித்தார். அதன் தலைவரான பத்மநாபனின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார்.
பின்னர் கி. வீரமணியோடு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் திராவிடர் கழகத்திலிருந்து விலகி, கோவை இராமகிருட்டிணனைப் பொதுச் செயலாளராகக் கொண்டு இயங்கிய திராவிடர் கழகம் (இரா) என்னும் அமைப்பில் இணைந்தார். அவ்வமைப்பின் துணை அமைப்பான திராவிடர் கழகத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராகச் சிலகாலம் பணியாற்றினார்.
தமிழக மக்கள் முன்னணியில்
மார்க்சிய லெனினிய மாவோயிசக் கோட்பாட்டின் அடைப்படையில் தமிழக மக்கள் முன்னணி என்னும் வெகுமக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பை உருவாக்குவதற்கான களப்பணியை சிலகாலம் மேற்கொண்டிருந்தார். சமூக நீதி மன்றம்
வள்ளிநாயகம் 1990 ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரான திருச்செந்தூருக்குத் திரும்பினார். அங்கே சமூக நீதிமன்றம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அவ்வமைப்பின் வழியாக இளைஞர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியில்
1990 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய தத்துவ அணிக்கு மாநிலத் தலைவராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அப்பொழுது தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை நடத்திய பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார். சகோதரத்துவ இயக்கம்
1992ஆம் ஆண்டில் அயோத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது கொடிக்கால் ஷேக் அப்துல்லா, எஸ். நடராஜன் ஆகியோருடன் இணைந்து சகோதரத்துவ இயக்கம் (Brotherhood Movement) என்னும் அமைப்பை ஆ. பு. வள்ளிநாயகம் உருவாக்கினார். தலித் – முசுலீம் இணைவை தனது நோக்கமாகக் கொண்ட அவர், இவ்வமைப்பின் வழியாக் மசூதி இடிப்பிற்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்தினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பேரவையில்
வள்ளிநாயகம் 2000 ஆம் ஆண்டில் எஸ். நடராசனுடன் இணைந்து தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கி, அதனுடைய பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். .
வாசுபயை பிரதமராகக் கொண்டு பாரதிய சனதா கட்சியின் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் இந்தியா முழுவதும் தலித் மக்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்து மதவெறி உணர்வை எதிர்த்தும் தமிழ்நாட்டில் செயலலிதாவை முதல்வராகக்கொண்டு அரசாங்கம் இயற்றிய சட்டத்தை எதிர்த்தும் நாங்கள் இந்துகள் அல்ல என்னும் ஊர்திப் பயணத்தைச் சென்னை முதல் குமரி வரை ஒருங்கிணைத்துத் தலித் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
பேராசிரியப் பணி
வள்ளிநாயகம், மதுரை தலித் ஆதார மையமானது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஏற்போடு நடத்தும் அம்பேத்கர் கல்வி மையத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது அப்பேத்கர் சிந்தனைகளை அம்மையத்தின் மாணவர்களுக்குக் கற்பித்தார்.
எழுத்தாளர் பேரவை
ஆ. பு. வள்ளிநாயகம் 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை என்னும் அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படைப் பணிகளை முன்னின்று செய்தார்.
இதழ்ப் பணி
வள்ளிநாயகம் தனது கருத்துகளையும் தான் சார்ந்திருந்த அமைப்புகளின் கருத்துகளையும் மக்களிடம் பரப்புவதற்காக 1980ஆம் ஆண்டுகளில் சங்கமி என்னும் இதழிற்கும் 1990 ஆம் ஆண்டுகளில் அலைகள் என்னும் திங்கள் இதழிற்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
எழுதிய நூல்கள்
வள்ளிநாயகம் 1993 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை பின்வரும் நூல்களை எழுதினார்:
வ. எண் ஆண்டு நூலின் பெயர் குறிப்பு
01 1993 தலைவர் அம்பேத்கர் சிந்தனைகள்
02 1994 போராளி அம்பேத்கர் குரல்
03 1994 பாட்டாளி மக்களும் தோழர் பெரியாரும்
04 1995 விளிம்பில் வசப்பட்ட மானுடம்
05 1996 புரட்சியாளர் அம்பேத்கர்
06 1996 பெரியார் பிறப்பித்த பெண்ணுரிமைப் பிரகடனங்கள்
07 1997 மானுடம் நிமிரும்போது
08 1999 பெரியார் பெண் மானுடம்
09 1999 பெரியார் பிறப்பித்த பெண்ணுரிமைப் பிரகடனங்கள்
10 1999 மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்
11 2000 அடிமைகளின் தலைவர் அய்யங்காளி
12 2001 நாம் இந்துக்கள் அல்லர் – பவுத்தர்கள்
13 2001 குடிசையில்தான் மானுடம் வசிக்கிறது
14 உரிமைப் போராளி ரெட்டமலை சீனிவாசன்
15 அம்பேத்கர் அறைகூவல்
16 பவுத்த மார்க்கம் பற்றி விவேகானந்தர்
17 பவுத்தம் ஓர் அறிமுகம்
18 மானுடத்தில் கோலோச்சியவர்கள் பவுத்தர்கள்
19 நமது தலைவர்கள் – எல். சி. குருசாமி, எச். எம். ஜெகநாதன்
20 சமநீதிப் போராளி இம்மானுவேல் சேகரன்
21 அடிமைகளின் தலைவர் அய்யங்காளி விரிவாக்கப்பட்ட 2ஆம் பதிப்பு
22 பூலான் தேவிக்கு முன் ராம்காளி : முன்னி
23 தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி
24 இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும் முதற்குடிகளும்
25 2005 மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்
26 தாத்ரி குட்டி
வள்ளிநாயகம் எழுதி, ஆனால் இதுவரை நூலாக வெளிவராத படைப்புகள்
வ. எண் படைப்பின் பெயர் குறிப்பு
01 விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் 2001 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தலித் முரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைத் தொடர். இதில் எல். சி. குருசாமி, உ. ஆ. பெருமாள் பீட்டர், ஆர். வீரையன், எச். எம். ஜெகந்நாதன், பாலசுந்தர்ராஜ், டி. ஜான் ரெத்தினம், பி. எம். மதுரைப் பிள்ளை, ம. பழனிச்சாமி, பி. வி. சுப்பிரமணியம் பிள்ளை, மகராசன் வேதமாணிக்கம், மீனாம்பாள், சத்தியவாணி முத்து, பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, வி. ஜி. வாசுதேவபிள்ளை, ஜோதி அம்மாள், எம். சி. ராஜா, அன்னபூரணி அம்மாள், ஜி. அப்பாதுரையார், இ. நா. அய்யாக்கண்ணு, புலவர் க. பூசாமி, எம். சி. மதுரைப் பிள்ளை, எம். ஒய். முருகேசம், குமாரன் ஆசான், பெரியார் ஆகியோரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள்.
02 மேலாடைப் புரட்சி
03 புத்த மார்க்கமும் மானுடத்தின் பொருத்தப்பாடும்
04 தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
05 மாவீரர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு
06 இட்லரிசமும் இந்துயிசமும்
07 செல்லப்பா முதல் சேக் அப்துல்லா வரை
08 அம்பேத்கரின் ஆசான் புத்தர்
விருதுகள்
வள்ளிநாயகத்திற்கு மதுரை தலித் ஆதார மையம் 2005 ஆம் ஆண்டில் விடுதலை வேர் என்னும் விருதினை வழங்கியது. 2007 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின் விருதாக அவருக்குத் தலித் முரசு – பாலம் கலை இலக்கிய விருது வழங்கப்பட்டது.
குடும்பம்
வள்ளிநாயகம் திராவிடர் கழகத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தபொழுது, அவரும் அவ்வியக்கத்தைச் சார்ந்தவரான ஓவியா என்பவரும் காதலித்து சாதிமறுப்புத் தம்மானத் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் ஜீவசகாப்தன் என்னும் மகனை ஈன்றனர். அவர் முசுலீம் பெண்ணை ஒருவரைக் காதலித்தார். அவர்கள் இருவரும் சாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.
மறைவு
வள்ளிநாயகம் 2007 மே 19 ஆம் நாள் இரவு 8 மணிக்குச் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.[8] பின்னர் அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.
நினைவேந்தல்
ஆ. பு. வள்ளிநாயகத்தின் நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் அம்பேத்கர் மய்யம் சார்பில் நடைபெறும் தலித் முரசு நூலகத்திற்கு சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் நினைவு நூலகம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது.


14.சொக்கமேலா


          Chokhamela was a saint in Maharashtra, India in the 14th century. He belonged to the Mahar caste considered "untouchable" in India in that era. He was born at Mehuna raja, a village in Deulgaon Raja Taluka of Buldhana district. He lived at Mangalvedha in Maharashtra. He wrote many Abhangas. He was one of the first Dalit poets in India. Chokhamela lived with his wife Soyarabai and son Karmamela in Mangalvedha. Chokhamela's hereditary task was to remove dead animals from people's homes and farms and to dispose of them beyond the town limits (this is task that has traditionally been performed by Mahars in Maharashtra). As a lower-caste person, Chokha was forced to live outside the town in a separate settlement for members of the untouchable caste.
His Family also followed varkari cult.
• Soyarabai - Wife
• Nirmala - Sister and her husband Banka (who is brother of Soyarabai)
• Karmamela - Son
He was initiated into bhakti spirituality by the poet-saint Namdev (1270?-1350?). Once when he visited Pandharpur, he listened to Sant Namdev's kirtan. Already a devotee of Vitthal alias Vithoba, Chokha was moved by Namdev's teachings.
Later, he moved to Pandharpur. The traditional story is that the upper castes here did not allow him to enter the temple,[3] nor did they allow him to stand in the door of the temple. So he built a hut on the other side of the river Chandrabhaga.
While working on construction of a wall in mangalvedha near pandharpur, the wall fell down, crushing some workers. Chokha was one of them. His tomb is in front of the Vitthal temple, Pandharpur, where it can be seen to this day. According to a legend the bones of the dead Chokhamela were still chanting Vitthal, Vitthal, apparently yearning to visit the Vitthal temple. The bones were buried at the footsteps of the Vitthal temple. In early 20th century, the Dalit leader Dr. Ambedkar, while attempting to visit the temple, was stopped at the burial site of Chokhamela and denied entry beyond that point for being a Mahar


15.திருவள்ளுவர்


திருவள்ளுவர் வரலாறும் திருக்குறளும்.
முன்னுரை:
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன.
திருவள்ளுவர் வரலாறு:
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர்.
திருவள்ளுவர் காலம்:
அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள். திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்:
திருவள்ளுவரது வேறு பெயர்கள்:
-நாயனார்
-தேவர்
-தெய்வப்புலவர்
-பெருநாவலர்
-பொய்யில் புலவர்
-நான்முகனார்
-மதனுபங்கி
-செந்நாப் போதார்
-பொய்யாப்புலவர்
‘குறள்’ பெயர் வரலாறு:
திருவள்ளுவர் என்பவர் தமது வாழ்க்கையில் அனுபவித்துணர்ந்து அவ்வப்போது ஒலைச்சுவடிகளில் டைரி போல் குறிப்பெடுத்து வைத்த சில பட்டறிவு யதார்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியுள்ளார். கிராமங்களில் இருக்கும் வீட்டு ஒட்டுத் திண்ணைகள் அல்லது மேடை மேல் வந்து அமர்ந்து கேட்பவரை நோக்கி அவருக்கு நடக்க வேண்டியதை குறித்து சொல்பவர்களை குறி சொல்பவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மந்திர தந்திர மாயாஜால வித்தைகளையும் கற்று வேடிக்கை செய்து காட்டி பிழைத்து வந்தவர்களாக இருந்ததால் மக்கள் அவர்களை குறளி வித்தை காட்டிகள் என்று அழைத்தனர். வள்ளுவர் குறளிகள் இனத்தவர் என்பதை இச்செய்தி மூலம் அறியலாம். இப்படி ஒரு இனத்தினர் அந்த நாளில் இருந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குறளி இனத்தில் இருந்து வந்தவர் எழுதியதால் குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது. ஒன்றரை வரிகளில் குறுகி எழுதப்பட்டதால் உரை எழுத அதனை ஆய்ந்தவர்கள் திரு என்ற வார்த்தையை அதன் முன்னால் சேர்த்து “திரு குறள்” என அழைத்தார்கள்.
நூல் அமைப்பு:
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்" ஆகிய அதிகாரங்கள். அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது. அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய, "ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்" என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார் திருவள்ளுவர். திருக்குறளின் பால்களும், இயல்களும்,
அதிகாரங்களும்:
திருக்குறளின் 1330 குறள்களும் மூன்று பால்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. அவை,
* அறத்துப்பால்
* பாயிரம்
* இல்லறவியல்
* துறவறவியல்
* ஊழியல்
* பொருட்பால்
* அரசியல்
* அமைச்சியல்
* அரணியல்
* கூழியல்
* படையியல்
* நட்பியல்
* குடியியல்
* காமத்துப்பால்
* களவியல்
* கற்பியல்
பழந்தமிழ் நூல்வரிசையில் திருக்குறள்
1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினெண் மேற்கணக்கு
2. பதினெண்கீழ்க்கணக்கு
3. ஐம்பெருங்காப்பியங்கள்
4. ஐஞ்சிறு காப்பியங்கள்
இவற்றில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறள் சிறப்பு பெயர்கள்:
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்:
Ø திருக்குறள் Ø முப்பால் Ø உத்தரவேதம் Ø தெய்வநூல் Ø பொதுமறை Ø பொய்யாமொழி Ø வாயுறை வாழ்த்து Ø தமிழ் மறை Ø திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது. திருக்குறள் உரை: பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது உரை. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் அரங்கேற்றம்: மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான். இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான். மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம். திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவமாலை: வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்: “ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப் போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று” சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார். திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள் 1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள் 2. திருக்குறள் - 1330 பாக்கள் 3. ரத்தினசிந்தாமணி - 800 பாக்கள் 4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள் 5. கற்பம் - 300 பாக்கள் 6. நாதாந்த சாரம் - 100 பாக்கள் 7. நாதாந்த திறவுகோல - 100 பாக்கள் 8. வைத்திய சூஸ்திரம் - 100 பாக்கள் 9. கற்ப குருநூல் - 50 பாக்கள் 10. முப்பு சூஸ்திரம் - 30 பாக்கள் 11. வாத சூஸ்திரம் - 16 பாக்கள் 12. முப்புக்குரு - 11 பாக்கள் 13. கவுன மணி - 100 பாக்கள் 14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள் 15. குருநூல் - 51 பாக்கள் இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக்கிடைக்கிறது. ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள் திருக்குறள்: திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு. திருக்குறள் காலம்: திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.


16.மகாத்மா புலே(11/04/1827-28/11/1890)


உண்மையான மகாத்மா ஜோதிராவ் புலே
        இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலே அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது குடும்பத்தினர் பூச்செடிகள், பழமரங்கள், காய்கறிகள் ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தனர்; பூ வியாபாரத்திலும் ஈடுபட்டனர். ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு கோவிந்த்ராவ், சிம்னாபாய் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ‘சுடர் ஒளி’ என்ற பொருளில் ஜோதி என இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.
        ஜோதிராவ் புலேக்கு ஒரு வயது இருக்கும்போது தாயார் சிம்னாபாய் இறந்துவிட்டார். தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒரு வளர்ப்புத் தாயை அமர்த்திக் கொண்டார். கோவிந்த்ராவ் தன் மகன் ஜோதிராவ் புலேயை பள்ளியில் சேர்த்தார். புத்திக் கூர்மையும், ஆர்வமும் மிகுந்த ஜோதிராவ் புலே படிப்பில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டார்.
         கோவிந்த்ராவ் கடையில் எழுத்தராக பணியாற்றி வந்தார். ஒரு பார்ப்பனர் “உன் மகன் கல்வி கற்பதால் மதவிரோதியாகிவிடுவான், விவசாய வேலைக்கு லாயக்கற்றவனாகிவிடுவான், கலகக்காரனாகிவிடுவான்” –என்று கோவிந்த்ராவிடம் கூறினார். அதைக் கேட்டு தன் மகனை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டாலும் புத்தகங்கள் மீதான ஆர்வம் அவருக்குக் குறையவில்லை. பகல் முழுவதும் வயலிலும், தோட்டத்திலும் உழைப்பார்; இரவு விளக்கு வெளிச்சத்தில் பல புத்தகங்களைப் படிப்பார்.
         இந்நிலையில் பதிமூன்று வயதில் ஜோதிராவ் புலேவுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. எட்டு வயது மனைவியின் பெயர் சாவித்திரி. உருது மொழி ஆசிரியர் ஹிப்விஹர் பெய்க் முன்சி என்பவர் முயற்சியால் 1844 ஆம் ஆண்டு மீண்டும் ஜோதிராவ் புலே, ஒரு மிஷனரி பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினான்கு.
         பாடங்களை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றார்; தன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். ஸ்காட்டிஸ் பிரிட்டிஷ் மிஷன் நடத்தி வந்த பள்ளியிலும், புத்வர் அரசு பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார்.
        ஜோதிராவ் புலே இளமையில் சிவாஜி, ஜார்ஜ் வாஷிங்டன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தார். அவர்களின் துணிச்சல், நாட்டுப் பற்று, உயர்ந்த குறிக்கோள் இவரது மனதில் பதிந்தது. தாய் நாட்டின் விடுதலைக்கு அவர்களைப் போலவே ஈடுபடத் தூண்டியது. மேலும், தாமஸ் பெயினின் படைப்பான ‘மனித உரிமைகள்’- என்ற புத்தகம் ஜோதிராவ் புலேயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறியாமையில் உழன்றுகிடந்த சக குடிமக்களை முன்னேற்றத் துடித்தார். காலம் கடந்துபோன மூட நம்பிக்கைகளுக்கு, அடிமைகளாக இருந்து வந்த அவர்களை எழுச்சிக் கொள்ள தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
         ‘மற்றவர்களுக்கு நன்மை செய்வதே நல்லொழுக்கம். மற்றவர்களுக்கு தீங்கிழைப்பது பாவம்’- என்ற கொள்கையை ஜோதிராவ் புலேயும் அவரது நண்பர்களும் கொண்டிருந்தனர். 1847 ஆம் ஆண்டு ஜோதிராவ் புலே தனது ஆங்கிலப் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டார். அமெரிக்க விடுதலைப் போராட்டத்திலிருந்து இவர் பெற்ற ஊக்கம் மிக ஆழமும், அகலமும் கொண்டதாக இருந்தது. குருதி நாளங்களில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மனித உரிமைகள், மனித சமத்துவம், மனித விடுதலை ஆகிய கருத்துக்கள் ஜோதிராவ் புலேயின் மனதை ஈர்த்தன. ஒரு தச்சனின் மகன் தச்சனாக இருக்க வேண்டும் என அக்காலத்தில் எதிர்பார்த்தது போலவே, தோட்டக்காரனின் மகனான ஜோதிராவ் புலே பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தோட்டக்காரனாகவே வருவான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோதிராவ் புலே மற்றவர்களின் வழியைப் பின்பற்றுபவரல்ல; அவரே ஒரு வழிகாட்டியாவார். மக்களின் நல்வாழ்வும், அவர்களுக்கு ஊழியம் புரியவேண்டுமென்ற உணர்வும் அவரது சிந்தனையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
         ஒரு பார்ப்பன நண்பரின் திருமண ஊர்வலத்தில் ஜோதிராவ் புலே கலந்துக் கொண்டதற்காக, பார்ப்பனர்களால் மிகவும் அவமானபடுத்தப்பட்டு விரட்டப்பட்டார். அந்த அவமானத்தால் மிகவும் மனம் பாதிப்படைந்தார். பார்ப்பனர்கள் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிரத்தில் அதிகம் துன்பத்திற்குள்ளானது ஏழை தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களே. பூனாவில் வீதியில் நடக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் இடுப்பில் இலைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். கழுத்தில் மண் சட்டியை தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். அச்சட்டிக்குள்தான் அவர்கள் தங்கள் எச்சிலைத் துப்பிக்கொள்ள வேண்டும். கீழே துப்பக் கூடாது. இந்த சுதந்திரம்கூட காலையிலும், மாலையிலும் கிடையாது. காரணம் அவர்களது நிழல் தங்களை அசுத்தப்படுத்திவிடும் (தீட்டு) என பார்ப்பனர்கள் கருதினார்கள்.
         பார்ப்பனர்களின் மேலாதிக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் நிலவி வந்தது. அடிமைத்தனம், வறுமை, துன்பம் இவைகள்தான் சூத்திரர்களின் நிலைமை. “சமூக இழிவுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும்; அடிமைச் சங்கிலியை உடைத்தெரிய வேண்டும்; மதத்தின் பெயரால் நடத்தப்படும் கொடுமைகளையும், பாதிப்புகளையும் எதிர்க்க வேண்டும்; மூடப் பழக்க வழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றின் வெங்கொடுமைகளை பற்றிய உணர்வுப் பூர்வமான புரிதல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட வேண்டும்! அப்போதுதான், விடிவு பிறக்கும்”- என்று ஜோதிராவ் புலே மக்களுக்கு எடுத்துரைத்தார்.
         வகுப்புவாதத்தைவிட சாதியம் அபாயகரமானது. காரணம், வகுப்புவாதத்தின் புயல் மையங்களை எளிதாக கண்காணித்து அதன் தீமைகளை இரக்கமின்றி வேரறுத்துவிடலாம். ஆனால், சாதியமோ தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர்கள் ஆகியோர் மத்தியில் கண்ணுக்கு தெரியாத வகையில் ஊடுருவி நிற்கிறது. சாதி மறைந்து வருகிறது. ஆனால் சாதி உணர்வோ தகுதி என்ற போர்வையின் கீழ் வாழ்ந்து வருகிறது. பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கையில் பிரச்சனை எழும். அப்போதெல்லாம், காலங்காலமாக கல்வியறிவு பெற்று வந்த தலைமுறையில் பிறந்த பார்ப்பன மாணவனை, தலைமுறை தலைமுறையாகக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதி மாணவனோடு ஒப்பிட வேண்டுமென, இத் ‘தகுதி’ மிக நுட்பமாக வாதம் செய்யும்; இப்படி தகுதி, திறமை பற்றி அன்றே ஜோதிராவ் புலே எடுத்துக் கூறினார். அவர் கூறி நூற்றைம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் மேல் சாதியினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்கின்றனர். தகுதி, திறமை என்ற சொத்தை வாதத்தை முன் வைப்பதையும், நீதி மன்றங்கள் அதையே பிரதிபலிப்பதையும் நாம் இன்று இந்தியாவில் கண்கூடாக காண முடிகிறது.
         பார்ப்பனியம் சமூக ஏற்றத் தாழ்வுகளை வளர்த்து வருகிறது. அதன் விளைவாக அதிகாரமும், சலுகைகளும் மேல் சாதியினருக்கு கிடைத்து வருகிறது. சாஸ்திரங்களும், புராணங்களும் மேல் சாதியினர்களுக்கு சாதகமான கருத்துகளை பரப்புகிறது. சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு தடையாக விளங்குகிறது. எனவே, பார்ப்பினியத்தை தீவிரமான தாக்குதல்கள் மூலம் முறியடிக்க வேண்டும் என மக்களை அணி திரட்டினார்.
         வேதம் படிக்கவும், வேதம் ஓதவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை இருந்தது. வேதங்களைப் படித்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாத பிற சாதி சிறுவர்களின் கல்வியை நயவஞ்சகமாக பல வழிகளில் பார்ப்பனர்கள் தடுத்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வி கற்றால் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு பங்காளிகளாக வந்துவிடுவார்கள்; அதனால் பெரும்பகுதி வேலைகள் அவர்களுக்கே சென்றுவிடும்; இவ்வாறு பார்ப்பனர்கள் கருதினர். அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்கு பல தடைகள் அக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.          “தொட்டிலை ஆட்டும் கைகள் உலகத்தை ஆளும்” என்ற பொன் மொழியின் உண்மையை உணர்ந்தவர் ஜோதிராவ் புலே. அறியாமை இருளை அகற்றவும், கல்வியறிவை வழங்கவும், பெண்களுக்கென பள்ளி ஒன்றை திறந்தார். பெண்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழி காட்டுபவர்கள், கல்வியின் மூலவேர் பெண்கள். அவர், தனது பள்ளியில் சூத்திரப் பெண்களுக்கும், ஆதி சூத்திரப் பெண்களுக்கும் கல்வி அளித்தார். இது வைதீகப் பார்ப்பனர்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. ‘அறிவும், கல்வியும் சூத்திரர் வீடுகளில் புகலிடம் தேடிக்கெண்டது’- எனப் புலம்பினார்கள். அக்காலத்தில் சாஸ்திர விதிகளின்படி கல்வி கற்கும் உரிமை சூத்திரனுக்கில்லை, ஆகவே, இது கடவுள் விருப்பத்திற்கும், மதத்திற்கும், சமூகத்திற்கும் எதிரானது. பெண்களுக்கு கல்வி கற்றுத் தருவது என்பது மிக மோசமான பாவச் செயலாகும். மேலும், “பெண் கல்வி கற்றால் தன் தந்தையை மதிக்க மாட்டாள், மற்றப் பெண்களோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்வாள், ஆணவக்காரியாக மாறிவிடுவாள், இழிவான நூல்களை படிப்பாள்” – என்ற மிகவும் பிற்போக்கான கருத்து நிலவி வந்தது. அணு அளவு சுதந்திரம்கூட பெண்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு கல்வியளிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியைத் திறந்த ‘முதல் சமூக சீர்த்திருத்தவாதி’ ஜோதிராவ் புலே.
         தனது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வேறு பெண்கள் வராத காரணத்தினால் தனது மனைவி சாவித்திரியை ஆசிரியராக நியமனம் செய்தார். ஜோதிராவ் புலே, பள்ளி நடத்துவதைக் கண்டு ஆத்திரமடைந்த உயர் சாதியினர், அவரது தந்தையைச் சந்தித்து மிரட்டல் விடுத்தனர். மிரட்டலுக்குப் பயந்து அவரது தந்தை, ஜோதிரவ் புலேயையும் அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். “நான் உயிரிழப்பதாக இருந்தாலும் சரி, என் லட்சியத்தை கைவிட மாட்டேன்” –என்று தனது தந்தையிடம் கூறிவிட்டு வெளியேறினார். வேறொரு இடத்தில் மீண்டும் பள்ளியை தொடங்கி பெண்களுக்கு கல்விப் பணியாற்றினார். பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டிகளிலும், கிணறுகளிலும் நீர் அருந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அந்நிலை கண்டு கொதிப்படைந்த ஜோதிராவ் புலே, தனது சொந்த செலவிலேயே குடிநீர் வசதி செய்து கொடுத்தார்.
         ஜோதிராவ் புலே கல்விப் பணிக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உன்னத மனிதர். பெண் கல்வியின் பாதுகாவலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நூல்நிலையம் ஆரம்பித்தார். ‘முதல் சுதேசி நூல் நிலைய’த்தை தொடங்கிய பெருமைக்குரியவர் ஜோதிராவ் புலே.         தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கவும், உரிமைகள் கிடைக்கவும் கல்வி மிக முக்கியம் என்பதை பிரச்சாரம் செய்தார். சிலைகளை வழிபடுவதைக் காட்டிலும், அறிவே சிறந்தது எனக் கூறினார். சமூக மாற்றத்திற்கு அறிவாயுதத்தை ஏந்துங்கள் என்று இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்.
         பெண் குழந்தைகளைக் கொல்லுதல், விதவைகளைக் கொளுத்துதல், பால்ய மணம்புரிதல், குழந்தை விதவை மறுமணத்தைத் தடுத்தல் – ஆகியவற்றை எதிர்த்துப் போராடினார். சமத்துவம், விடுதலை, பகுத்தறிவு இவற்றின் அடிப்படையில் புதிய சமூகத்தைச் சமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘அறியாமை என்பது ஒரு அபாயகரமான நோய்’-அறியாமையை எதிர்த்து அறிவாளிகள் போராடவேண்டும்! என்று எடுத்துரைத்தார். விதவைகளை மொட்டையடிக்கும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார். நாவிதர்களைத் திரட்டி மொட்டையடிப்புக்கு எதிராக போராட வைத்தார்.         1888 ஆம் ஆண்டு, மே மாதம், 11 ஆம் தேதி, மண்ட்வி பகுதியிலுள்ள கோவிவாடா அரங்கில் சாதாரண மக்கள், தங்கள் விடுதலைப் போராளிக்கு நன்றி செலுத்த ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு இவர் ஆற்றி வந்த நீண்டகால, தன்னலமற்ற உன்னதப் பணிகளைப் பாராட்டி தலைவர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். அறியாமை, வைதீகம், தனிச் சலுகை ஆகியவற்றிற்கு எதிராகத் தனி ஒருவராகப் போராடியதற்காகவும், அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நன்மைக்காக அயர்வின்றி பாடுபட்டதற்காகவும் ஜோதிராவ் புலேவுக்கு “மகாத்மா” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
         தீண்டத்தகாதவர்களுக்காகவும், பெண்களுக்காவும் இவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகவும் போராடிய ஜோதிராவ் புலே 1890 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார்.
         பொய்க்கு எதிரான உண்மையின் போராட்டம்; அநீதிக்கு எதிரான நீதியின் போராட்டம்; அடிமைதனத்திற்கெதிரான விடுதலையின் போராட்டம்; இப்படி சமூகப் போராட்டங்களுக்கு வித்திட்டவர் ஜோதிராவ் புலே! அதனால்தான் மகாத்மா காந்தி 1933 ஆம் ஆண்டு மே மாதம் எரவாடா சிறையிலிருந்த நேரத்தில், ஜோதிராவ் புலேயை ‘ஒரு உண்மையான மகாத்மா’ எனப் பாராட்டினார்.
“கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது.
அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது.
நல்லொழுக்கக் குறைவால், முன்னேற்றம் நின்று போனது.
முன்னேற்றம் நின்றுபோனதால், செல்வம் மறைந்தது.
செல்வக்குறைவினால், சூத்திரர்கள் அழிந்தனர்.
கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும் ஊற்றெடுக்கின்றன”
-ஜோதிராவ் புலே



17.சாமுவேல்
பறையனார்
(10/06/2014)



சாமுவேல்பறையனார் தன்மான விடுதலை வரலாற்றைச் சுமந்த வீரமகன் சாமுவேல்பறையனார் கடந்த 30 ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குரலாய் முழங்கிய தலைவர் சாமுவேல்பறையர் 10.06.2014 இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் பிறந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - சோமையாபுரத்தில் வீரமரணம் எய்தினார். தனது இளவயது முதலே தென்தமிழகத்தில் தலித் மக்களுக்காகப் பாடுபடும் பண்புடையவராக விளங்கியவர் சாமுவேல் பறையர்.1985ல் தலித் இளைஞர் இயக்கத்தை நிறுவி, தென்தமிழகத்து தலித் இளைஞர்களை ஒருங்கிணைத்து தலித் மக்களின் வாழ்வாதாரங் களுக்காகப் பேராடி வந்தார். தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகளில், நேரடியாகக் களம் புகுந்து பதில் தாக்குதலில் ஈடுபடும் போக்கை தலித் இளைஞர்கள் மத்தியில் வளர்த்தவர். அதன் மூலம், 1990களில் பெருவீச்சாய் புறப்பட்ட தலித் அரசியலிற்கு இயக்கரீதியிலான தொடக்கத்தை அளித்தவர் சாமுவேல் பறையர் என்று சொல்லவேண்டும். 1990களின் தொடக்கத்தில் தென்தமிழகப் பகுதிகளில் பறையர் சமூக மக்களின் தன்மான, சமூக, அரசியல் விழிப்புணர்விற்கு ஆழமாக அடித்தளத்தை கட்டமைத்தவர் சமூவேல் பறையர். கிராமம் கிராமமாக திண்ணைகளில் அமர்ந்து இளைஞர் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். மதுரை மாநகரத்தில் கையால் மலம் அள்ளிச் சுமந்த தலித் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சாமுவேல் பறையர் ஆற்றிய மிகத்தீவிரமான களப்பணிகளால், அம்மக்கள் மதிப்பிற்குரிய மாற்றுத்தொழில்களுக்கு மாறினர். அதனால் அவர்களுக்கு எற்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதில்தரும் பாதுகாப்பு அரணாக நின்றார். அதனால், மதுரை நகரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கினார். பறையர்களை அரசியல் சக்தியாகத் திரட்டும் நோக்கில் 1992ல் பறையர் பேரவையைத் தொடங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இளையபெருமாள், வை.பாலசுந்தரம் போன்றோரின் கட்சிச்சார்பு அரசியலுக்கு எதிராக சாமுவேல் பறையர் நடத்திய பரப்புரைகள், தனித்த அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெருமளவிலான பறையர் இளைஞர்களிடையே ஏற்படுத்தியது. அதன் விளைவாக, தென்தமிழகத்தில் பறைச்சேரிகள் முழுவதிலும் பறையர் பேரவையின் கொடிகள் பறந்தன. பேரவையின் பெயர்ப்பலகைகள் ¬வைக்கப்பட்டன. வீடு வீடாக பாபாசாகேப் அம்பேத்கரின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. சேரிகள் தோறும் அம்பேத்கரின் சிலைகள் நிறுவப்பட்டன. விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் எப்படிப்பட்ட தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் மனத்துணிவை பறையர் சமூக மக்களிடையே உருவாக்கி, அம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர் சாமுவேல் பறையர். 1995களில் அறிஞர் குணாவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்த்தேச அரசியலில் கவனப்பட்ட சாமுவேல் பறையர், தனது பறையர் எழுச்சி அரசியலை தமிழ்த்தேசியத்தின் விடுதலைக்குப் பயன்படுத்தினார். அவரது சாதி ஒழிப்பு அரசியலால் ஈர்க்கப்பட்ட நகர்புற தலித் இளைஞர்களை, தமிழ்த்தேசிய அரசியலை நோக்கி ஆர்வப்படுத்தினார். அதனால், திருச்சி, கடலூர், கடந்து சென்னை வரை பறையர் பேரவை விரிவாக்கம் கண்டது. பறையர் சமூக மக்களின் தலைமையில் தமிழ்த்தேசிய விடுதலை என்ற அரசியல் லட்சியத்தோடு இருபதாண்டுகளுக்கு முன்பு அவர் தொடங்கிய விடுதலைப் பயணம் இன்று தமிழகம் முழுதும் விரிவடைந்துள்ளது. ‘பறையர் குரல்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். 15 ஆண்டுகளாக இடை வெளிவிட்டு வெளிவந்த அந்த இதழில் பறையர் சமூகத்தின் வரலாற்றுவாக்கிலான எழுச்சியையும் தமிழக மண்ணில் பறையர் சமூக மக்கள் ஆற்றிய பங்களிப்பையும் பெரும் தொடராக எழுதி வந்தார். ரெட்டமலை சீனிவாசனாரின் வரலாற்றை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது பறையர் குரல். ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மானத்திற்காகவும் விடுதலைக்காகவும் போராடிய சாமுவேல் பறையர் இன்று மறைந்துவிட்டார். அவரது பணிகள் இன்று நம் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. விடுதலை வரலாற்றை அடுத்தத் தலைமுறையிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.


18.NANDANAAR



19.ந. சிவராஜ்


          ந. சிவராஜ் (பி. 29 செப்டம்பர் 1892- இ. 29 செப்டம்பர் 1964) வழக்கறிஞர், நீதிக்கட்சித் தலைவர், அரசியல் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்பட்டவர். டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து பணியாற்றியவர். பிரித்தானிய அரசு இவருக்கு இராவ் பகதூர் பட்டம் அளித்துக் கவுரவித்தது.
கல்வி
          இவரைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே 4ஆம் வகுப்புவரை இவரது தந்தை படிக்க வைத்தார். பிறகு, இராயப்பேட்டையிலிருந்த வெஸ்லி பள்ளியில் 5ஆம் வகுப்பில் சேர்த்தார். பள்ளி இறுதி வகுப்புவரை அங்குப் பயின்ற சிவராஜ், வெஸ்லி கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 1917ஆம் ஆண்டு சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். தொழில்           சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1925இல் சென்னைச் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
திருமணம்
          சிவராஜ்,தனது 26ஆம் அகவையில் 1918ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 10ஆம் நாள் மீனாம்பாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மீனாம்பாள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெண்களைத் திரட்டித் தீவிரமாகப் போராடியவர். அரசியல் வாழ்வுசிவராஜ் தொடக்கக் காலம் முதலே நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.பல சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும், நீதிக்கட்சி மாநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு தீண்டப்படாத மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துப் போராடியபோது அவர்களுக்கு ஆதரவாகச் சென்னை மாகாணத்தில் செயல்பட்டார். இராசகோபாலாச்சாரி 1937இல் முதல் அமைச்சரானவுடன் சிவராஜ் சட்டக்கல்லூரி பேராசிரியர் பதவியைவிட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அம்பேத்கர் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை 1942இல் அமைத்தபோது சிவராஜை அதன் அகில இந்தியத் தலைவராக அறிவித்தார். சிவராஜ் அம்பேத்கருடன் நெருக்கமாக இருந்து சமூகப் பணிகளைச் செய்துவந்தார். அம்பேத்கர் மறைவுக்குப்பின் இந்தியக் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது அதன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பணிகள்1927 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரே ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்த்துக் கொண்டதில்லை. சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது வழக்கு தொடுத்து வழக்கில் வென்ற பிறகே 1928முதல் ஆதிதிராவிட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி ஆண்களுக்கு 21 எனவும், பெண்களுக்கு 16 எனவும் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை 27.3.1928இல் சென்னை சட்டமன்றத்தில் கொண்டுவந்தார்.அதை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார். 17.11.1928 இல் முத்தையா முதலியார் கொண்டுவந்த வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு ஆணையைச் சத்தியமூர்த்தி எதிர்த்துப் பேசினார். முத்தையா முதலியாருக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் பேசினார். 30.2.1933 அன்று பொப்பிலி அரசர்கொண்டுவந்த இனாம்நில ஒழிப்பு மசோதாவை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார். அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்களுக்கு இனாமாகக் கொடுத்த நிலத்தைக் கைப்பற்றி விவசாயக் குடிகளுக்குக் கொடுக்கும் மசோதா அது. காந்தி உண்ணாவிரதம் இருந்ததால் தனிவாக்களர் தொகுதியை நேர்ந்த பூனா ஒப்பந்தம்நியாயமற்றது. ஆதிதிராவிட மக்களின் உரிமையைப்பறிப்பது ஆகும் என்று அந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து சட்டமன்றத்தில் 1934இல் தீர்மானம் கொண்டுவந்தார். நீதிக்கட்சி ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேறியது. 7.8.1935 அன்று சிவராஜ் தென்னாற்காடு மாவட்டம் வெள்ளையன்குப்பம் படையாச்சிகள் குற்றப் பரம்பரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார்.
வகித்த பதவிகள்
          1926 முதல் 1936 முடிய நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.
20.11.1945 அன்று சென்னை மாநகர மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957 தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு திருப்பெரும்புதூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைவு
          பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த செப்டம்பர் 1964இல் தில்லி சென்றார். தில்லியில் இருந்தபோதே 29ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் உடல் தில்லியிலிருந்து விமானம் வழியாகச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பவுத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.



20.அன்னை மினாம்பாள் சிவராஜ்

26/12/1904-30/11/1992

மீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர்1904 - 30 நவம்பர், 1992பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். தமிழ்தெலுங்குஇந்திஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர்.
குடும்பவிபரம்
இவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.[2] இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.
பொறுப்புகளும் பணிகளும்
·        கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
·        கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
·        திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
·        சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
·        தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
·        சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
·        சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
·        போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
·        S.P.C.A உறுப்பினர்
·        நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
·        தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
·        அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
·        சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
·        விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
·        காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
·        மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
·        சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
·        அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்

·        லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்

  

TO KNOW MORE


Free Visits Counter

7 comments:

  1. My Dear Sekar Suppiah.It is really a great job done by you.Keep tempo of you job.Congratulations.

    ReplyDelete
  2. அருமையான முயற்சி, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான முயற்சி, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Hero list Please can add Mr.P.M.Mathurai pillai paryar 1858

    ReplyDelete